படக்குனு "அசைந்த" கூடை.. கிட்ட போன ஆபீசர்ஸ்.. உள்ளே எட்டிப்பார்த்தால்... திருதிருன்னு விழித்த "உருவம்"
மலேசியாவில் இருந்து அரியவகை உயிரினங்களை கடத்தி வந்த நபரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்
சென்னை: அதிகாரிகள் அத்தனை பேரும் ஏர்போர்ட்டில் சோதனையில் குழுமியிருக்க, அசால்ட்டாக அந்த கூடையை கொண்டு செல்ல முயன்றுள்ளார் அந்த நபர்.. இறுதியில் அதிகாரிகளிடம் வசமாக சிக்கிவிட்டார்.. அந்த கூடைக்குள் அப்படி என்ன இருந்தது?
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் உட்பட பல்வேறு கடத்தல்கள் நடக்காதவண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள்.
அதில் பிடிபடுபவர்களையும் கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒரு சிலர் டிமிக்கி கொடுத்து கடத்தல்களில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்கள்.

டிசைன் டிசைன்
இது அனைத்து ஏர்போர்ட்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதனால்தான் கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வருகிறார்கள். துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு விமானங்களில் வரும் பயணிகள் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், விலங்குகள், பறவைகள் உட்பட பல்வேறு பொருட்களை, பல்வேறு வடிவங்களில் மறைத்து கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.. அதிலும் டிசைன் டிசைனாக நூதன வழிகளில் கடத்தி வருவதும் தொடர்கதையாகி விட்டது. இப்போதும் ஒரு சம்பவம் நம் சென்னை ஏர்போர்ட்டிலேயே நடந்துள்ளது.

டவுட் கிளம்பியது
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, ஏர்போர்ட் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது.. அதனால் அவரை மட்டும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்... அந்த நபர் அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவர் மீது மேலும் சந்தேகம் வலுத்தது.. எனவே, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்..

அசைந்து அசைந்து
அப்போது அவர் கொண்டு வந்திருந்த கூடை ஒன்று லேசாக அசைந்தது.. ஏதோ உயிருள்ள பொருள் உள்ளே இருப்பது போலவும் தெரிந்தது.. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கூடையை திறந்து பாா்த்தனர்.. உள்ளே ஏதோ உயிரினங்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. ஆனால், அது என்னவென்று அதிகாரிகளால் உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவைகள் நம்ம ஊரை சேர்ந்த உயிரினங்கள் போலவும் தென்படவில்லை.. அதனால், அதை பிடித்து ஆராய்ந்தபோது, அரிய வகை உயிரினங்கள் அதாவது பல்லிகள் என்று தெரியவந்தது.

கூடைக்குள்ளே
இது தென் ஆப்பிரிக்கா, வட அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் மட்டும் வாழுமாம்.. ரொம்பவும் அபூர்வமானதும்கூட.. இந்த 4 சிறிய தேகு பல்லிகள் அந்த கூடையில் இருந்தன.. இதைதவிர, குள்ளநரி போல ஒன்று தென்பட்டது.. அது வடஅமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குள்ளநரி வகையை சேர்ந்ததாம்.. ரக்கூன் குட்டி என்பார்கள்.. இதுவும் அந்த கூடைக்குள்ளேயே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்... இதை பற்றி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பயணியிடமே கேட்டனர்.. அவைகள் எல்லாம் அபூர்வ வகை குட்டிகள் என்பதால், அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்ததாக சொன்னார்..

4 பல்லிகள்
ஆனால், இப்படி விலங்குகளை இன்னொரு நாட்டிற்கு கொண்டுவந்தால், அந்த விலங்குகளுக்கான ஆவணங்கள் மற்றும் அந்த உயிரினங்களை மெடிக்கல் செக்கப் செய்து, அவைகளுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சர்ட்டிபிகேட்களையும் கொண்டு வர வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால், இவைகள் எதுவுமே அந்த பயணியிடம் இல்லை.. இதைதவிர, சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்... அந்த சான்றிதழ்களும் பயணியிடம் இல்லை.

ரக்கூன் குட்டி
எனவே, இந்த உயிரினங்களை எல்லாம் சட்டவிரோதமாக கடத்திவந்ததால், கூடைக்குள் இருந்த 4 பல்லிகள், ஒரு ரக்கூன் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. பின்னர், சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகளுக்கு இதை பற்றி தகவல் கொடுக்கவும் அவர்கள் விரைந்து ஏர்போர்ட்டுக்கு வந்தனர்.. கூடைக்குள் பார்த்தபோது இவை அபூர்வ வகையை சேர்ந்தது என்பதையும் உறுதி செய்தனர்.. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பல்லிகள், ரக்கூன் ஆகியவற்றை மறுபடியும் மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications