Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பென்னாகரத்தில் என்ன சத்தம் என்ற அளவுக்கு சலசலப்புகள் முற்றி வருகின்றன.. "டாக்டர் ஐயா ராமதாஸ் எந்தப் பக்கம்?" என்கிற ஒற்றைக் கேள்விக்கான விடை தான் பல நேரங்களில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது. ஆனால், இந்த முறை கட்சியின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. எப்போதும் மற்ற கட்சிகளைத் திணறடிக்கும் டாக்டர் ராமதாஸ், இப்போது தன் வீட்டிற்குள்ளேயே மகனிடம் திணறிக்கொண்டிருப்பது தான் தமிழக அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக். அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் செய்திதான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

பாமகவில் டாக்டர் ராமதாசுக்கும் ஜி.கே. மணிக்கும் கடுமையான மோதல் வெடித்திருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் என்றாலே, டாக்டர் ராமதாஸ் தான் பரபரப்பாகப் பேசப்படுவார்.

PMK Dr Ramadoss GK Mani Pennagaram Tamil Nadu Assembly Election 2026 Tamifl Nadu Election 2026 2026

டாக்டர் ராமதாஸ்

அதிலும், ராமதாஸ் எந்த கூட்டணிக்கு போகிறார் என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்படும். பிரதான கட்சிகள், ராமதாஸை முதலில் தங்கள் வசமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டு காய்களை நகர்த்தி சக்சஸ் பண்ணும். அந்த அளவுக்கு, தேர்தல் காலக்கட்டத்தில் முக்கியமான டூல் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் இந்த முறை நிலைமையே தலைகீழ்.. ராமதாஸ் கற்ற அரசியல் வித்தைகள் எதுவும் அவரது மகன் அன்புமணியிடம் எடுபடவில்லை. பாமக என்றால் அன்புமணி தான் என்பது போல நடந்து கொண்டிருக்கிறது.

ராமதாஸின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாகவும், வலது கரமாகவும் விளங்கிய ஜி.கே. மணி மற்றும் சேலம் அருள் ஆகியோர், "ஐயா இந்த முறை திமுக அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பார்" என நம்பித் தொண்டர்களைத் திரட்டினர். ஆனால், அன்புமணிக்கு எதிரான அதிகாரப் போட்டியில் கவனம் செலுத்திய ராமதாஸால், வலுவான கூட்டணிக் கதவுகளைத் திறக்க முடியவில்லை.

ஜிகே மணி - சலசலப்பு

சசிகலாவுடன் கூட்டணி, தொகுதி உடன்பாடு இல்லாமலே வேட்பாளர்களை அறிவித்தது போன்ற அவரது அதிரடி முடிவுகள் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தின. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களிடம் சொல்லாமலே அவர்களது பெயரை அறிவித்தல் என அடுத்தடுத்த அதிரடிகளில் ஈடுபட்டாலும், அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டார் ராமதாஸ்.

இதனால் வேட்பாளர்களே வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராமல் இருப்பது பாமகவின் தேர்தல் வியூகத்தை நிலைகுலையச் செய்துள்ளது. ராமதாஸால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனராம்

தமிழ்குமரன் காங்கிரஸ்

இந்த இக்கட்டான சூழலில், ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் இணைந்தது ராமதாஸிற்குப் பேரிடியாக அமைந்தது. இதனை சற்றும் எதிர்பாராத ராமதாஸ், மணியை அழைத்துத் தனது ஆவேசத்தைக் கொட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்ததாகத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பென்னாகரம் தொகுதியில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளரைத் தோற்கடிக்கவே தனது மகனைப் போட்டியிட வைப்பதாக ஜி.கே. மணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே தனது மகன் தமிழ் குமரனை காங்கிரசில் இணைத்து விட்டார் ஜி.கே. மணி. இதை எதிர்பார்க்காத ராமதாஸ், மணியை அழைத்து, கடுமையாக திட்ட இருவருக்கும் வார்த்தை தடுத்துள்ளது.

அப்போது ஜிகே மணி, "பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அன்புமணி வேட்பாளரை நிறுத்துகிறார். அந்த வேட்பாளாரை தோற்கடிக்க வேண்டும் என்பது தானே உங்க ஆசை? அதைத்தான் தமிழ் குமரனை வைத்து செய்கிறேன்" என்று விளக்கம் தந்துள்ளார்.

டாக்டர் ஐயா ராமதாஸ்

அதேபோல, திமுக கூட்டணியில் பென்னாகரம் தொகுதியைப் பெற்ற காங்கிரஸ், தமிழ் குமரனை களத்தில் இறக்கியிருக்கிறது. உடனே இதுகுறித்த ஒரு சீக்ரெட் தகவல் ராமதாசுக்கு கிடைத்துள்ளது. அதாவது, திமுக சொல்லித்தான் தனது மகனை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைத்திருக்கிறார் ஜி.கே.மணி என்கிற விபரம் ஐயாவுக்கு கிடைத்துள்ளது.

உடனே மணியிடம் பேசிய ராமதாஸ், " நீ எதுக்காக உன் மகனை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து சீட் வாங்கி கொடுத்தாய் என்பதும், இதுக்கு சூத்திரதாரி திமுகங்கிறதும் தெரியும் மணி . நீ இப்படி துரோகம் செய்திருக்கக் கூடாது" என கடினமான வார்த்தைகளில் குமுறினாராம்.

திமுக சூத்திரதாரி

அதைக் கேட்டு மணியும் வார்த்தைக்கு வார்த்தை பேச, இருவருக்கும் மோதல் வெடித்திருக்கிறது. அப்போது", என் மீது நீ வைத்துள்ள விசுவாசம் உண்மைன்னா பென்னாகரத்தில் நம் கட்சி சார்பில் நீ போட்டியிட வேண்டும். பென்னாகரம் உன் சிட்டிங் தொகுதி தானே?" என சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ந்த மணி, தனது மகனை எதிர்த்து, தானே எப்படி போட்டியிடுவது என வாதிட்டுள்ளார் ஜி.கே. மணி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால், நேற்று வரை பென்னாகரத்தில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையாம் ராமதாஸ்.

"நான் போட்டியில்லை என்றும், நீ தான் போட்டியிட வேண்டும் என்றும் ராமதாஸ் - ஜி.கே. மணியிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இதில் யார் ஜெயிக்க போகிறார்களோ? " என்கிறார்கள் பாமகவினர்.

- எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+