பென்ஷனில் அதிரடி.. சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கு வந்த சூப்பர் சான்ஸ்! இந்த தேதியில் ரெடியா இருங்க
சென்னை: ஓய்வூதியம் வாங்கும் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளிக்க, மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று ஏற்கனவே உறுதி தரப்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். அது என்ன?
கடந்த ஆண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திருத்தப்பட்டதுடன், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமும் அமலில் உள்ளது..

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவர்..
பென்ஷன் சிக்கல்
எனினும், இன்றுவரை பலருக்கும் பென்ஷன் உடனடியாக கிடைப்பதில்லை.. பென்ஷனை நம்பியே பல குடும்பங்கள் உள்ளபோது, பல முதியோர்களுக்கு தாமதமாகவே கிடைக்கிறது.. இதனால் வயதான காலத்தில் வங்கிகளுக்கும் அலைய வேண்டியிருக்கிறது..
ஓய்வூதியம் தொடர்பான புகார்களை சரிசெய்ய பென்ஷன் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தாலும், பல சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாகவும் புகார்கள் கிளம்பின.. எனவேதான், ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தார்.
மத்திய அரசு தந்த உறுதி
டெல்லியில் நடைபெற்ற 13-வது அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் மத்திய அமைச்சர் பேசும்போது, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியதாரர்களின் கவுரவத்தை உறுதிசெய்ய சிறந்த நடவடிக்கையும் தேவையாக உள்ளது..
ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்பதால் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்காக அலைக்கழிக்கப்படக்கூடாது. ஓய்வூதியதாரர்களை அரசு துறைகளும், அலுவலர்களும் பயனாளிகளாகவும் நடத்தக்கூடாது. நிர்வாக குடும்பத்தின் மதிப்புமிகு உறுப்பினர்களாக நடத்த வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தார்.
அதுமட்டுமல்ல,2017ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் இதுவரை நடைபெற்ற 12 பென்சன் குறைதீர்ப்பு முகாம்களில் 25,416 கோரிக்கைகள் பெறப்பட்டு, 18,157 கோரிக்கைகளுக்கு குறிப்பாக 71 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெருமிதமாக கூறியிருந்தார்.
ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி
மத்திய அமைச்சரின் இந்த உரையானது, நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம் ஒன்று சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் நடப்பதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
பென்ஷன் வாங்குபவர்கள் ரெடியா
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது: "சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள். ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் 12.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று அரசு கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில் கீழ்காணும் படிவத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 62, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரிக்கு 25.08.2025-க்குள் அனுப்பி வைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications