குடும்ப ஓய்வூதியம் வாங்குவோருக்கு சூப்பர் சான்ஸ்.. பென்ஷன் பெறுவதில் சிக்கல்? தொலைத்தொடர்பு துறை செம
சென்னை: பென்ஷன் பெறுவோர்கள் சந்தித்து வரும் நடைமுறை சிக்கல்கள், பிரச்சினைகளை சமாளிக்க, மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று ஏற்கனவே உறுதி தரப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்து வரும்நிலையில், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமானது கடந்த வருடம் திருத்தப்பட்டிருந்ததுடன், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமும் அமலில் தற்போது உள்ளது..

ஓய்வூதிய திட்டங்கள்
இப்புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், தாங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்கள்.. ஆனாலும், இன்றுவரை பலருக்கும் பென்ஷன் உடனடியாக கிடைப்பதில்லை..
இந்த பென்ஷனை நம்பித்தான் பல குடும்பங்கள் உள்ளன.. இதனை வாங்குவதற்காக முதியோர்கள், வங்கிகளுக்கும் நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது..
பென்ஷன் குறைதீர்ப்பு முகாம்
ஓய்வூதியம் தொடர்பான இதுபோன்ற புகார்களை சரிசெய்யவே பென்ஷன் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. அதுமட்டுமல்ல, பென்ஷன் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற 13-வது அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில், இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்..
ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்பதால் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்காக அலைக்கழிக்கப்படக்கூடாது, ஓய்வூதியதாரர்களை அரசு துறைகளும், அலுவலர்களும் பயனாளிகளாகவும் நடத்தாமல்இ, மதிப்புமிகு உறுப்பினர்களாக நடத்த வேண்டும் என்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் அட்வைஸ் தந்திருந்தது நினைவிருக்கலாம்.
தொலைத்தொடர்புத் துறை
இப்படிப்பட்ட சூழலில்தான், தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் இன்றைய தினம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அந்த அறிவிப்பில், "தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டது.
இன்று குறைதீர்ப்பு முகாம்
இந்த குறைதீர்ப்பு இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை காணொலிக்காட்சி முறையில் நடைபெறவுள்ளது.
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை சமர்ப்பித்து, இதுவரை தீர்வு காணப்படாமல் நீண்டகாலமாக தொடரும் குறைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தக் குறைதீர்ப்பு முகாமில் பரிசீலிக்கப்படும்.
காணொளி வாயிலான இந்த குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான இணைப்பு, முகாம் நடைபெறும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக உங்களுக்கு பகிரப்பட்டு இருக்கும். அதை வைத்து குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications