ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்.. ஊருக்கு வேட்பாளர் வந்தால் மக்களுக்கு கொண்டாட்டம்.. களைகட்டிய களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. பிரச்சாரத்தைப் பார்க்கச் சென்றால் பணம் கிடைப்பதால் பொதுமக்கள் ஹேப்பி மோடில் இருக்கிறார்களாம்.

நமது நாட்டில் மொத்தம் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

People are very happy since they are getting money during candidate campaigns

இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக vs பாஜக vs நாம் தமிழர் என இந்த முறை பல முனை போட்டி நிலவுகிறது.

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருப்பதால்.. பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகம் நகர் மயமான மாநிலங்களில் ஒன்றாகும். இங்கே நகர்ப்புறங்களும் கிராமங்களும் சம அளவில் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் என வரும் போது நகர்ப்புறங்களில் பிரச்சாரம் செய்வது ஈஸி.. மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஈஸியாக பிரச்சாரம் செய்யலாம்.

ஆனால், கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்வது ஈஸி இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் சில நூறு வாக்குகள் தான் இருக்கும் என்றாலும் தவறாமல் அனைத்து கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கும். இல்லையென்றால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பல ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டி இருக்கும். அதுவும் தென்தமிழகத்தில் பல தொகுதிகளில் கிராமங்களே அதிகம் என்பதால் அங்கே வேட்பாளர்கள் முகாமிட்டு வருகிறார்கள்.

தென் தமிழகம்: அதில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வேட்பாளர்கள் சின்ன சின்ன ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் நேரடியாகப் பிரச்சாரத்திற்குச் செல்கிறார்கள். முன்பு போலப் பிரச்சாரத்திற்கு தன்னிச்சையாக மக்கள் வருவது ரொம்பவே குறைந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். எனவே, வேட்பாளர்கள் கிராமங்களுக்குப் போகும் போது சம்பந்தப்பட்ட கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் ஆண், பெண்களை அழைத்து வந்து கூட்டம் காண்பிக்க வேண்டும் என்பதே கட்டளை.

அதன்படி வேட்பாளர்களின் பிரச்சார கூட்டங்களில் வரும் ஆண்களுக்கு 200 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாயும் என வழங்கி வருகிறார்கள். வேட்பாளர்கள் பல்வேறு ஊர்களுக்கும் செல்ல வேண்டி இருப்பதால் அதிகபட்சம் ஒரு கிராமத்தில் ஒரு மணி நேரம் தான் பிரச்சாரம் செய்வார்கள். எனவே, இந்த 1 மணி நேரம் வந்து பிரச்சாரத்தைப் பார்த்துச் சென்றாலே அவர்களுக்குப் பணம் கிடைப்பதால் மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.

பணம் பட்டுவாடா: எஞ்சிய நேரம் வழக்கம் போல தங்கள் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். இந்த 200 ரூபாய் என்பது நகர்ப்புறங்களில் பெரிய தொகை இல்லை என்றாலும் கிராமங்களில் பலருக்கும் இதுவே கணிசமான தொகை என்பதால் மக்களுக்கும் பிரச்சாரத்தை வந்து பார்த்துவிட்டு பணம் வாங்கி செல்வதாகக் கூறப்படுகிறது.

இதில் சில கட்சிகள் வாக்குப்பதிவுக்கு முன்பு ஒரு சில நாட்களுக்கு ஓட்டுப்போடப் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று கூட அந்தந்த கட்சி பிரமுகர்கள் மூலம் மக்களுக்கு வாக்குறுதி தந்து வைத்துள்ளார்களாம்.

டல் அடிக்கும் அதிமுக: இப்படி தென்தமிழகத்தில் பல தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் நடந்து வந்தாலும், அதிமுக தரப்பு மட்டும் தென் மாவட்டங்களில் பிரச்சாரத்திற்குப் போவதிலும் பணப் பட்டுவாடா செய்வதிலும் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கே அதிமுக பிரச்சாரங்கள் அனைத்தும் டல் அடிப்பதாகக் கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+