சென்னை அடுக்குமாடி குடியிருப்பில்! 2வது மாடியில் தொங்கிய குழந்தை! ஹீரோக்களாக மாறிய மக்கள்! திக்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்த பத்திரமாக மீட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அந்த சம்பவம் நடந்து உள்ளது. அது வெங்கடேஷ் - ரம்யா தம்பதியின் 7 மாத பெண் குழந்தை எனத் தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. அங்கே குடியிருப்பு தொடர்பான சில புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

People came together to save a baby who was hanging in Chennai apartment

இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த குடியிருப்பின் 4வது மாடியில் பால்கனியில் இருந்து தாவி குழந்தை ஒன்று சன் ஷேடில் விழுந்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது. அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் வீடியோவில் காணப்படவில்லை. பால்கனியில் இருந்து தாவி குழந்தை சன் ஷேடில் சரிந்தபடி கீழே வந்துள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த நிலையில்தான் அடுக்குமாடி குடியிருப்பில் எதிரே வசிப்பவர்கள், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து அங்கே குழந்தையை மீட்க களமிறங்கி உள்ளனர்.

துணி கொண்டு வந்தனர்: முதலில் துணி கொண்டு வந்து குழந்தையை பிடிக்க முயன்று உள்ளனர். அதன்பின் பெரிய ஜமுக்காளம் கொண்டு வந்து குழந்தை கீழ் விழுந்ததும் அதை பிடிக்க முயன்று உள்ளனர். இந்த நேரத்தில் குழந்தை சரசரவென கீழே விழும்படி வந்துள்ளது.

அதற்குள் கீழ் மாடியில் இருக்கும் சிலர் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்க முயன்று உள்ளனர். ஆனால் இரண்டாம் மாடியில் இருந்தும் மேலே வந்து அவர்களால் பிடிக்க முயடியவில்லை. இந்த நிலையில்தான் கீழே மெத்தை எல்லாம் கொண்டு வந்து போட்டு குழந்தையை மீட்க பார்த்துள்ளனர்.

தொங்கிய குழந்தை: இன்னொரு பக்கம் இரண்டாவது மாடியில் குழந்தை அப்படியே தொங்கியபடி இருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக குழந்தை அங்கேயே தொங்கியபடி இருந்துள்ளது. இந்த நிலையில்தான் இரண்டாவது மாடியில் இருந்து இன்னொருவர் வேகமாக மேலே ஏறி உள்ளார்.

ஜன்னல் வழியாக ஏறி குழந்தை இருக்கும் இரண்டாவது மாடி மீது ஏற முயன்று உள்ளார். இரண்டாவது மாடி மீது தாவி அந்த நபர் கடைசியில் ஒருவழியாக குழந்தையை மீட்டு உள்ளார். அதோடு இல்லாமல்.. குழந்தையை கையால் பிடித்து உள்ளே பத்திரமாக கொண்டு சென்றுள்ளார். குழந்தையை மீட்டது மட்டுமின்றி அதை காப்பாற்ற மேலே சென்றவர்களும் உள்ளே செல்லும் வரை கீழே இருந்தவர்கள் துணியை விரித்து இருந்த காட்சிகள் மக்கள் இடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஒரு குழந்தையை காக்க மொத்த அப்பார்ட்மென்ட்டும் களமிறங்கியது வரவேற்பை பெற்றுள்ளது. அது வெங்கடேஷ் - ரம்யா தம்பதியின் 7 மாத பெண் குழந்தை எனத் தெரிய வந்துள்ளது. அந்த குழந்தையின் பெற்றோர்கள் மீது கடுமையான ஆக்சன் எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+