‛ஆக்சிஜன்’ இருக்கு! நிலவிலும் மனிதர்கள் வாழலாம் போலயே? யோசிக்க வைத்த சந்திரயான் 3! ‛மாஸ்’ அப்டேட்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை சந்திரயான் 3 ரோவர் இன்று உறுதி செய்துள்ளது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியா பக்கம் திரும்ப பார்க்க வைத்துள்ள நிலையில் நிலவில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பூமியின் துணைக்கோளாக நிலா உள்ளது.நிலவில் முதல் முதலாக ரஷ்யா (அப்போது சோவியத் யூனியன்) ஆளில்லா விண்கலத்தை 1966ல் தரையிறக்கியது. இதையடுத்து ரஷ்யாவுக்கு போட்டியாக அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா நிலவில் மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்தது. இதுவரை அமெரிக்கா நிலவில் 12 பேரை தரையிறக்கி நடக்க வைத்துள்ளது.

அதேபோல் அண்டை நாடான சீனாவும் நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி உள்ளது. இந்த வரிசையில் நிலவின் தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. கடந்த 23ம் தேதி சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டரை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறக்கி அசத்தினர்.
இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. தற்போது விக்ரம் லேண்டர் மற்றும் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்து வருகின்றன. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று மண்மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தான் ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும்அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டானியம், மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. தற்போது நிலவில் ஹைட்ரஜன் வாயு இருக்கிறதா? என்பதை ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
ரோவரின் இந்த கண்டுபிடிப்பு என்பது தான் தற்போது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்த உலகநாடுகளையும் இந்தியாவை நோக்கி திரும் வைத்துள்ளது. ஏனென்றால் நிலவு ஆய்வு என்பது அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. தற்போது ஆக்சிஜன் இருப்பதை ரோவர் கண்டுபிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் ஆக்சிஜனை தான் நாம் அனைவரும் சுவாசிக்கிறோம். தற்போது அங்கு ஆக்சிஜன் இருப்பதால் மனிதன் நிலவின் உயிர்வாழ்வதற்காக சாத்தியக்கூறுகள் என்பது அதிகரித்துள்ளது.
ஏனென்றால் இதற்கு முன்பும் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் கடந்த 2008ல் நிலவு ஆய்வுக்காக சந்திரயான் 1 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் என்பது ஆர்ப்பிட்டர் மற்றும் மூன் இம்பேக்ட் ப்ரூப் எனும் கருவியை உள்ளடக்கியது. இதில் ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்த நிலையில் மூன் இம்பேக்ட் ப்ரூப் எனும் கருவின் நிலவின் மேற்பரப்பில் மோத செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நிலவில் நீர்மூலக்கூறுகள் இருப்பதை சந்திரயான் - 1 உறுதி செய்தது.
ஏற்கனவே இந்தியாவின் சந்திரயான் 1 நிலவில் நீர்மூலக்கூறுகளை உறுதி செய்த நிலையில் அடுத்தக்கட்டமாக தற்போது நிலவின் ஆக்சிஜன் இருப்பதை சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது. தற்போது 6 நாட்கள் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இன்னும் இன்னும் 8 நாட்கள் லேண்டர், ரோவர் ஆய்வு செய்ய இருக்கிறது. இதில் இன்னும் முக்கிய விஷயங்களை ரோவர் கண்டுபிடிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவின் நிலவு ஆய்வை பிரமித்த பார்ப்பதோடு, ஒவ்வொரு விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications