"படிக்கவே உடம்பு நடுங்குதே".. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயலலிதா.. வெளியான உண்மை.. கொதிக்கும் மக்கள்!
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டு உள்ள நிலையில், 439வது பக்கத்தில் இருக்கும் முக்கியமான விவரம் ஒன்று மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மை அதிமுக தொண்டர்கள் பலர் இந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர்.
ஜெயலலிதா எவ்வளவு வலிமையான தலைவராக இருந்தார்.. ஆனால் அவருக்கு போய் இப்படி செய்துவிட்டனரே என்று உணர்ச்சி பொங்க கமெண்ட் செய்துள்ளனர்.

அறிக்கை
முக்கியமாக இந்த அறிக்கையில் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ செய்யாமல் மருத்துவர்கள் தடுக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா மருத்துவர்கள் ஆஞ்சியோ செய்ய பரிந்துரை செய்தும் அதை செய்ய விடாமல் தடுத்தனர் என்று கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சசிகலா மீதும் இதில் நேரடியாக 426 பக்கத்தில் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஆஞ்சியோ சிகிச்சை தொடர்பாக இந்த பக்கத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

ஆஞ்சியோ
அதில், உறவினர்களற்ற மறைந்த முதல்வரை அவரது இறுதி நாள்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து அப்பல்லோ மருத்துவமனையிலேயே வைப்பதற்காக, சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவியாக திகழ்ந்தார். அப்பல்லோ சிகிச்சையில் ஆஞ்சியோ செய்வதை தவிர்த்து R.1 சசிகலா,C.W.99 டாக்டர்.Y.V.C. ரெட்டி, C.W.106 - டாக்டர் பாபு ஆபிரகாம். C.W.136 - சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் C.W.146 சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரால் நன்கு திட்டமிடப்பட்டு, இறுதி வரை சரியாகச் செயல்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது, என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயலலிதா
இது போக, 439வது பக்கத்தில் இருக்கும் முக்கியமான விவரம் ஒன்று மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அப்போதைய தலைமைச் செயலாளர், 4.12.2016 அன்று தகவலின் பேரில், மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மறைந்த முதல்வருக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே அவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். வார்டில் பார்த்த போது மறைந்த முதல்வருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டு; அவர் பெரும் அதிர்ச்சியுற்றதாகக் கூறினார்.

வார்டு
இது ஏன் வார்டில் செய்யப்படுகிறது என்று மருத்துவர்களிடம் கேட்டு, அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறி உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். C13-டாக்டர் விகினேஷ் 4.12.2016 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மருத்துவமனையின் முதல்வரைத் தொடர்பு கொண்டு உடனடியாக அப்போலோ செல்லுமாறு கூறியதாகவும், அங்கு சென்றதும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ECM தொடர்பான சந்தேகங்களைக் கேட்டதாகவும் தெரிவித்தார்.

மார்பு
அமைச்சர் நேரடியாக மார்பு வெட்டப்பட்டது தவறா என அவரைக் கேட்டதாகக் கூறினார். அவசரகாலத்தில் இதைச் செய்யலாம் என்று பதிலளித்தார். இதயம் மீண்டும் செயல்படுமா என்ற கேள்விக்கு. அது முற்றிலும் நோயைப் பொறுத்தது என்று பதிலளித்தார். C817. டாக்டர் சிவக்குமார், மாரடைப்பு ஏற்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மறைந்த முதல்வர் வாந்தி எடுத்தார். எனக் கூறியதாகத் தெரிவித்தார். டாக்டர் ரமாதேவி, 4.12.2016 அன்று இரவு 9 மணி வரை பணியில் இருந்ததாகக் கூறினார், என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கை
அறிக்கையில் இருக்கும் இந்த விஷயம் மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண வார்டில் ஜெயலலிதாவிற்கு அறுவை சிகிச்சை செய்ததை மக்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சாதாரண மக்களுக்கு கூட இப்படி சிகிச்சை செய்ய மாட்டார்களே. ஒரு முதல்வருக்கு ஏன் இப்படி செய்தனர். ஒரு அவசர சிகிச்சை பிரிவு அறைக்கு கூட இவர்கள் கொண்டு செல்லவில்லையா? என்ன இது என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ரத்த வாரிசு
ஜெயலலிதாவுக்கு ஒரு ரத்த வாரிசு இருந்திருந்தால் இவ்வளவு கொடுமைகள் அந்த அம்மாவுக்கு நடந்திருக்காது. அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தால்தான் இப்படி எல்லாம் செய்துள்ளனர் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் என்னது...வார்டில் ஓப்பன் ஹார்ட் சர்ஜரியா..என்னய்யா சொல்றீங்க. இதைபடிக்கும் போது நமக்கே உடம்பு நடுங்குது., என்றும் நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயர்ன் லேடி
ஜெயலலிதா அயர்ன் லேடி என்று புகழப்பட்டவர். மிகவும் கண்டிப்பானவர். ஆனால் அவருக்கு போய் இப்படி செய்துள்ளனர். இதுதான் ஒரு நாட்டில் முதல்வருக்கே ஏற்படும் நிலையா? இதில் சசிகலா குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். இதனால் அவரைத்தான் கைது செய்ய வேண்டும். சசிகலாவை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
