உதயநிதியின் சனாதன பேச்சுக்கு தேர்தலில் பதில் கொடுங்க.. அண்ணாமலை யாத்திரையில் முழங்கிய பியூஸ் கோயல்
சென்னை: ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக மற்றும் காங்கிரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தலில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
வரும் லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்கியது. அண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரை சென்றார்.

2 கட்ட பாதயாத்திரையை நிறைவு செய்த அண்ணாமலை 3ம் கட்டமாக இன்று திருப்பூரில் அண்ணாமலை யாத்திரையை தொடங்குகிறார். முன்னதாக அவருக்கு ஒரு வார கால ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3-வது கட்ட பாதயாத்திரையை தொடங்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல் முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். அப்போது பியூஷ் கோயல் கூறியதாவது: - சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை உலக நாடுகளுக்கு கொண்டு செல்கிறார். ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக, காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு











Click it and Unblock the Notifications