5வது நாளாக மிரள வைக்கும் கொரோனா.. சென்னை பேருந்துகளிலும் இனி கட்டாயம் மாஸ்க்- மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காததுதான்.

கொரோனா இரண்டாவது தடுப்பூசி
அது போல் பெரும்பாலானோர் கொரோனா இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. ஒரு சிலர் முதல் தவணை ஊசியை கூட செலுத்தாமல் இருக்கிறார்கள். ஜூலையில் கொரோனா 4ஆவது அலை அதிகரிக்கும் என ஐஐடி கான்பூர் கணித்துள்ளது. 3ஆவது அலையை போல் இந்த 4ஆவது அலையையும் முறியடிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொள்கிறது.

கொரோனா உயர்வு
தமிழகத்தில் இத்தனை நாட்களாக 1000 க்குள் இருந்த கொரோனா கேஸ் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் 2,662 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 5ஆவது நாளாக 1060 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ரூ 500 அபராதம்
இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதாவது வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவற்றில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஒரு வேளை அணியாவிட்டால் அவர்களிடமிருந்து ரூ 500 அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பேருந்துகளிலும் மாஸ்க் கட்டாயம்
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட உத்தரவில் சென்னையில் பேருந்தில் பயணிப்போர் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இதை நடத்துநர் உறுதி செய்ய வேண்டும். அது போல் நடத்துநரும் ஓட்டுநரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகம் கூடாதவாறு பார்த்துக் கொள்ள நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பேருந்து பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications