கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்தியை விடுங்க.. புதிய வேட்பாளர் மாதேஸ்வரனின் சர்ச்சை வீடியோ வெளியீடு
சென்னை: மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள். மாதேஸ்வரனும் மாற்றப்படுவாரா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய 4 கட்சிகள் தமிழகத்தில் உள்ள அதிக தொகுதிகளை பிடிக்க களமிறங்கியுள்ளன. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்த நிலையில் எல்லா கட்சியினரும் வேட்பாளர்களை நிறுத்திவிட்டார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மீதமுள்ள ஒரு தொகுதிக்கும் ஓரிரு நாளில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் சில கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்பாளராக சூர்ய மூர்த்தியும் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில் ஆணவப்படுகொலை செய்வேன். தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம். வரும் காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என சூர்யமூர்த்தி உளவுத் துறைக்கே சவால் விட்ட வீடியோ வைரலாகி சமூகவலைதளங்களில் பரவியது. ஆணவக் கொலையை ஆதரித்து ஒரு வேட்பாளர் பேசியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சூர்ய மூர்த்தி மாற்றப்பட்டார். தற்போது வேட்பாளராக மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொமதேகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிபோதையில் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் காவல் துறைக்கு சவால் விடுப்பதுமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
இப்படிப்பட்ட சம்பவங்களால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். இது போன்ற சர்ச்சையான வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட அறிவிக்கக் கூடாது என்றும் மக்கள் கருதுகிறார்கள். கடந்த முறையை போல் இந்த முறையும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications