ஆன்லைன் ரம்மி தடை! தாமதத்திற்கு ‘இதுதான்’ காரணம்! அமைச்சர் ரகுபதி சொன்ன விளக்கம்! மக்களிடம் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : எந்த நீதிமன்றத்தாலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் அந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது முதல்வரின் விருப்பம் எனவும், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

வல்லுநர் குழு

வல்லுநர் குழு

தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைமுறைகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

ரம்மி ஒழிப்புச் சட்டம்

ரம்மி ஒழிப்புச் சட்டம்

இது தமிழகம் முழுவதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி ஒழிப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் கொண்டு வந்தால் எந்த நீதிமன்றத்தாலும் அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை முதல்வரின் விருப்பம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

 விரைவில் சட்டம்

விரைவில் சட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து பேசும்போது,"இது தொடர்பாக இரண்டு முறை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தால் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் கொண்டு வர வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் விருப்பம். எனவே அதற்கேற்ற வகையில் தற்போது விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில் அதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்படும் பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்" என கூறியுள்ளார்.

வரவேற்பு

வரவேற்பு

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுந்து வரும் நிலையில் தடை தாமதத்தால் பலரும் தமிழக அரசை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி சொன்ன விளக்கத்தை சமூக வலைதளங்களில் பலரும் ஏற்று கொண்டுள்ளனர். ஏற்கனவே சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மிக வலுவான ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர முயற்சி செய்திருப்பது வரவேற்பதிற்குரியது எனவும், தாமதமாகவே வந்தாலும் உறுதியான உடைக்க முடியாத அளவு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+