தமிழ்நாட்டில் வேகமாக குறையும் கொரோனா.. 1,542 பேருக்கு தொற்று உறுதி.. உயிரிழப்பும் குறைவு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அதன்பின்னர் கொரோனா சற்று வேகம் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும்.

உயிரிழப்பும் குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 26,08,748 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோட்டில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,835 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,793 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,56,116 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகமாக இருக்கிறது.

சென்னையில் குறைவு
17,797 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,61,889 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,08,00,383 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 162 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் கோவை தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

கோவையில் ஆதிக்கம்
கோவையில் 231 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 126 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 34 பேருக்கும், மதுரையில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 32 பேருக்கும், திருவள்ளூரில் 70 பேருக்கும், திருச்சியில் 43 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 64 பேருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ஈரோட்டில் 122 பேருக்கும், சேலத்தில் 67 பேருக்கும், நாமக்கல்லில் 48 பேருக்கும், தஞ்சாவூரில் 58 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, ஈரோடு மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனா குறைந்து வருவதையொட்டி தமிழ்நாட்டில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறப்பு, தியேர்ட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications