புதிய வருமான வரிச்சட்டம்..இவங்களுக்கு எல்லாம் ஒரு ரூபாய்கூட வரி கிடையாது..நிர்மலா அசத்தல் அறிவிப்பு
சென்னை: புதிய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 கீழ் யாருக்கெல்லாம் வருமான வரி கிடையாது, எந்தெந்த வருமானங்களுக்கு வரி கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. நேற்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025’ என்று அழைக்கப்படும்.
'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்ற ஒரு என்று மாற்றும். வரி ஆண்டு என்று ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும். இதன் வரைவு மசோதா தற்போது வெளியாகி உள்ளது. இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 கீழ் பின்வரும் முறையில் வருமானங்கள் வந்தால் வரி கிடையாது
விவசாய வருமானத்திற்கு வரி கிடையாது.
கூட்டு நிறுவன லாபங்கள் மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
குடும்ப ஓய்வூதியங்கள் மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
உதவித்தொகை மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
NRE / FCNR டெபாசிட்டுகளுக்கான வட்டி மற்றும் குறுகிய கால விலக்குகள் மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
அரசின் நிதி உதவிகள் மூலம் வரும் வருமானங்களுக்கு வரி கிடையாது, பல்வேறு வகையான வருமானங்களுக்கான விலக்குகளை இந்த சட்டம் லிஸ்ட் போட்டு உள்ளது. .
வருமான வரி மசோதாவில் உள்ள இந்தப் புதிய வடிவம் தனிநபர்கள் தங்களின் குறிப்பிட்ட வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறதா இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். புதிய சட்டம் இந்த செயல்முறையை எளிதாக்குகிறது.
வருமான வரி சட்டத்தில் மாற்றம்
இந்தியாவில் நடைமுறையில் உள்ள தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது, தற்போது புதிய வருமான வரிச் சட்டம் 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப தற்போதுள்ள வழக்கில் உள்ள சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பின்வரும் முக்கியமான மாற்றங்களை செய்து உள்ளனர்.
1. வருமான வரி சட்டத்தை எளிமையாக்கி உள்ளனர். எல்லோரும் புரிந்துகொள்ளும்படி வருமான வரி மாற்றப்பட்டு உள்ளது.
2. வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்பட்டு உள்ளது. புதிய தளம், செயலி உருவாக்கப்படும்.
3. பிஸ்னஸ் வருமான வரி இப்போது சிக்கலாக உள்ளது. இதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றி உள்ளனர்..
முந்தைய சிக்கலான சட்டத்திற்குப் பதிலாக நாட்டில் புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர சமீபத்தில் ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய வருமான வரி மசோதாவை அரசு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications