கார் கொடுக்க அவங்க என்ன ஒன்னும் இல்லாதவங்களா? இல்லை சுதந்திர போராட்ட தியாகிகளா? மக்கள் நறுக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார் கொடுக்க எம்எல்ஏக்கள் என்ன ஏழைகளா இல்லை சுதந்திர போராட்ட தியாகிகளா என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் ஒன் இந்தியா யூடியூப் சேனல் சார்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் இரு வேறு கருத்துகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சொன்னதை பார்க்கலாம். "எம்எல்ஏக்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள் என சொல்கிறார்கள். அவர்களுக்கு கார் வாங்கிக் கொடுப்பது அநியாயமா இல்லையா?

Car for MLAs

நாடே வந்து கடனில் மூழ்கியிருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் என்ன ஒன்றும் இல்லாதவர்களா? அவர்களுக்கு கார் கொடுத்தாலும் அவர்களது குடும்பத்தினர்தான் பயன்படுத்த போகிறார்கள். கார் வாங்க எதற்காக அரசாங்கத்தின் பணத்தை வீணடிக்க வேண்டும்?" என எதிர் குரல் எழுப்பியிருந்தனர்.

அது போல் வேறு சிலர், "எல்லா எம்எல்ஏக்களுக்கும் ஒரு காரும், அது இல்லாமல் உதவியாளர்களுக்கான ஊதியம் ஒரு லட்சம் ரூபாய் பணமும் கொடுக்கிறேனு சொல்கிறார்கள். இதுவரைக்கும் எந்த ஆட்சியிலும் இது மாதிரி நடந்தது கிடையாது. நமது முதல்வர் விஜய்யோட நடவடிக்கை எல்லாம் சூப்பரா இருக்குது. அருமையான திட்டம்!. இந்த திட்டத்தை நல்ல விதமாக பார்க்கிறேன். சில எம்எல்ஏக்கள் கிட்ட கார் கிடையாது. அவங்களுக்கு கார் கொடுத்தால் மக்களோட விஷயங்களை நேரடியாக உடனே போய் பார்க்குறதுக்கு இது உதவியாக இருக்கும்" என தவெக அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் கூறுகையில், "சட்டசபையில் கார் கேட்கும் ஒரு எம்எல்ஏ பென்ஸ் கார் வைத்திருக்கிறார். அவர்களுக்கு கார், பெட்ரோல், உதவியாளர்னு செலவு செய்ய அவர்கள் என்ன தியாகிகளா? கார் இல்லாத எம்எல்ஏக்கு கார் கொடுக்கிறதுல தப்பு இல்லை. ஆனால் கார் வைத்திருப்போருக்கு கொடுக்கிறது தேவையில்லாத செலவுதான்.

நாற்காலி, கார் இதெல்லாம் தேவையே இல்லை. 234 எம்எல்ஏக்களுக்கும் இன்னோவா கார் வாங்கினால் ரூ 18 கோடிக்கு செலவாகும். அது இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒரு வாகனத்துக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு வந்தால் பொருளாதார நெருக்கடியும் நிதிச்சுமையும் அரசுக்கு ஏற்படும். இந்த காரை விஜய் சொந்த காசுல கொடுக்க போறது இல்லை. இது அரசு பணத்தில் கொடுப்பதால் தேவையில்லாத செலவுதான்" இவ்வாறு கார் விவகாரத்தில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி சட்டசபையில் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில் "நான் 250 கி.மீ. தொலைவில் இருந்து நான் சட்டசபைக்கு வருகிறேன். எனக்கு சொந்தமாக வண்டி, வாகனம் கிடையாது.

வாடகை வண்டியில்தான் வருகிறேன். செருப்பு வாங்கக் கூட வழியில்லாத எளிய பின்னணியில் இருக்கிறேன். தொகுதி மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை. ஒரு செயலாளரை உடன் வைத்துக் கொண்டு ஊதியம் கொடுக்கவும் வசதி இல்லை.

இப்படித்தான் முக்கால்வாசி சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே வாகன வசதியும் மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், காருக்கு டிரைவர், வாகன படி ரூ 75 ஆயிரம், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+