நானும் விவசாயிதான்.. டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்.. எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் பிரச்சனையை புரிந்து சட்டமன்றத்தில் பேசியதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மக்களின் எழுச்சி காரணமாகவே திமுக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 2,015 ஹெக்டேர் நிலத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கொண்டு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் சுரங்கத்தை வெட்டி எடுப்பதற்காக டெண்டரை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின் மத்திய அரசு அரிட்டாப்பட்டியில் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தரப்பில் தங்களுக்கு ஆதரவு கூறிய அரசியல் கட்சியினருக்கு நன்றி கூறி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தரப்பில், நாங்கள் அறிவித்த டெண்டரை இறுதி செய்யும் வரை மாநில அரசுடன் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதனால் இறுதி செய்கிறோம் என்று கூறியது. மக்கள் பாதிக்கடப்படக் கூடிய திட்டமாக இருந்தால், டெண்டர் அறிவித்த உடனே, 9 மாதங்களில் உங்கள் உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவிக்காதது ஏன்?
அப்படி மத்திய அரசிடம் கூறியிருந்தால், இந்த போராட்டமே தேவையில்லை. யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் திமுகவினர் 9 மாதமாக காலம் தாழ்த்தினார்கள். ஆனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்த தீர்மானத்தை 2023ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்திருக்கலாம் தானே?
அப்போதெல்லாம் திமுகவினர் எந்த தீர்மானத்தையும் கொண்டு வரவில்லை. இதனை விவசாயிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களின் போராட்டம் காரணமாக இந்த சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் பிரச்சனை அறிந்து அதிமுக தரப்பில் மக்களுக்கு ஆதரவாக நானும் சட்டப்பேரவையில் பேசினேன்.
அப்போது நான், என் உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று தெரிவித்தார். அதன்பின்னர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என் பதவியே போனாலும் பரவாயில்லை என்று கூறியதாக பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அக்கட்சியினர் இடையே பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications