பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: நீ நட்சத்திரமல்ல.. சூரியனுக்குச் சுடர்கொடுத்தாய்.. வைரமுத்து புகழ் மாலை!
சென்னை: தமிழ்த் தாயின் தலைமகனாகப் போற்றப்படுகிற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்த தினம் இன்று. தமிழ்நாடு முழுவதும் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அண்ணா!
நீ நட்சத்திரமல்ல
ஆனால்,
சூரியனுக்குச்
சுடர்கொடுத்தாய்
நீ ஜமீன்தாரின்
சந்ததி அல்ல
தமிழ்நிலமே உன்
காலடியில் கட்டுண்டது
நீ கவிஞனல்ல
உன் உரைநடையும்
உரையும்
கூடிப்பெற்ற குழந்தைகளே
கவிஞர்களானார்கள்

வெற்றிலைக்குச்
சுண்ணாம்பு தடவும்போதே
எங்கள் இருளுக்கும்
வெள்ளையடித்தாய்
சட்டைப் பொத்தான்களைச்
சரியாகப் போடாத நீ
சரித்திரத்தின் பொத்தான்களைச்
சரியாய்ப் பொருத்திவிட்டாய்
நீ ஆயுதம் ஏந்தவில்லை
சில ஆயுதங்களைக்
கீழே எறிந்தே கீர்த்தியுற்றாய்
எந்த நிறத்தையும்
நீ வெறுக்கவில்லை
பல்லிற் படிந்த
வெற்றிலைக் காவியைக்கூட
நாவினால்
தன் காதுகளைச் சுத்தம்செய்யும்
ஒட்டகச் சிவிங்கி போல
நாட்டையே சுத்திகரித்தாய்
நாவினால்
இழிபழி மொழிகளை
இடக்கையால் இடறினாய்
எந்தப் பறவை உன்மீது
எச்சமிட்டாலும் அதில்
இன்னொரு விருட்சத்திற்கு
விதை சேகரித்தாய்
எல்லாம் மறக்கப்படும்
காலக் கரையான்
கல்வெட்டுகளையும்
அரித்துவிடும்
ஆனால்,
நீ சூட்டிய பெயரில்
வாழ்ந்திருப்பாய்
'தமிழ்நாடு'
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications