'அண்ணன்' சீமான் வீட்டில் 'தம்பி' பேரறிவாளன், அற்புதம் அம்மாள்- நெகிழும் நாம் தமிழர் நிர்வாகிகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான பேரறிவாளன் நேற்று சந்தித்து பேசியதை நெகிழ்ச்சியுடன் அக்கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் பேரறிவாளன். உச்சநீதிமன்றத்தில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இவ்வழக்கு சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்றது.

இந்த வழக்கில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேரறிவாளனின் விடுதலையை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடி வருகிறது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் என பலரையும் பேரறிவாளன் நேரில் சந்தித்து தமது விடுதலைக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார் பேரறிவாளன்.

இந்த அடிப்படையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பேரறிவாளன் நேற்று சந்தித்தார். அதற்கு முன்னதாக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியிருந்த சீமான், வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனை மொத்தம் 3,000 பேர் தான் சந்தித்திருந்தனர். நான் அந்த சிறைக்குப் போன 6 மாதத்திலேயே பேரறிவாளன் உள்ளிட்டோரை 50,000 பேர் சந்தித்தனர். என்னால்தான் பேரறிவாளன் சிறையில் இருப்பதையே இத்தனை ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவிப்பதையே வெளி உலகம் தெரிந்து கொண்டது என கூறியிருந்தார். சீமானின் இந்த் பேச்சு பெரும் சர்ச்சையாகவும் நகைப்புக்குரியதாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளன், சீமானை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் உடன் இருந்தார். மேலும் ராஜீவ் கொலை வழக்கில் வாதாடிய தடா சந்திரசேகரையும் பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். சீமான்-பேரறிவாளன் சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகிகள் நெகிழ்வுடனும் புளகாங்கிதத்துடனும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
Recommended Video

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications