முழுவெற்றியும் முதல்வருக்கு தான்! யாரும் தம்பட்டம் அடிக்க கூடாது என்றாரா சின்னத்திரை நடிகை காயத்ரி?
சென்னை: ‛‛பேரறிவாளன் விடுதலைக்கு குறித்து யாரும் தம்பட்டம் அடித்து கொள்ள வேண்டாம். முழுவெற்றியும் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினையே சேரும்'' என சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் கூறியதாக வெளியான தகவல் போலியானது எனத் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரிறவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2016ல் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர்.

பேரறிவாளன் விடுதலை
அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் வி டுதலை செய்தது. அரசியலமைப்பின் 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதாக சுட்டிக்காட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காங்கிரஸ் எதிர்ப்பு
பேரறிவாளனின் இந்த விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று வாயில் வெள்ளைத்துணி கட்டி தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மற்ற கட்சிகள் ஆதரவு
காங்கிரஸ் தவிர தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகள் பேரறிவாளன் தீர்ப்பபை வரவேற்றுள்ளன. திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, நாம்தமிழர் உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. மேலும் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலை ஆனதால் பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேரறிவாளனும், அவரது தாய் அற்புதம்மாளும் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களை சந்தித்தனர்.

திமுக, அதிமுக கருத்து மோதல்கள்
இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் திமுக, அதிமுக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் எனும் அமைச்சரவை தீர்மானத்தை அதிமுக அரசு நிறைவேற்றியதாகவும், அதனடிப்படையில் தான் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியினர் கூறுகின்றனர். இதற்கு எதிர்மாறாக பேரறிவாளனை விடுதலை செய்ய நாங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றதாக திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

சின்னத்திரை நடிகை போலி டிவிட்டர் கணக்கு
இந்நிலையில் தான் இதுதொடர்பாக சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ் பெயரிலான ரசிகரின் ஃபேக் ஐடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், ‛‛பேரறிவாளன் விடுதலைக்கு நான் காரணம், நீ காரணம் என்று யாரும் தம்பட்டம் அடித்துக் கொள்ள தேவையில்லை... முழுவெற்றியும் தமிழக முதலமைச்சரை மட்டுமே சேரும்'' என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் பேரறிவாளன் விடுதலை என்பது முதல் அமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளுக்கான வெற்றி என அவர் தெரிவித்துள்ளார். இது நடிகை கருத்து என பலரும் நினைத்த நிலையில் ட்விட்டர் ஹேண்டிலை உற்று பார்த்தவர்களுக்கு இது ஃபேக் ஐடி என்பது புரிய வந்தது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்ததுதான் மிச்சம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications