காலியாகும் நாம் தமிழர் கட்சி..வெளியேறும் சீமான் தம்பிகள்..அதிமுகவிற்கு போன பேராவூரணி திலீபன்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து வெளியேறி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். புதிய விக்கெட் ஆக விழுந்தவர் பேராவூரணி திலீபன். நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்த பேராவூரணி திலீபன் அதிமுகவில் இணைந்துள்ளார். தம்பிகளாக வலம் வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி மாற்றுக்கட்சியில் இணைவது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் வானில் பரபரப்பான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணிகள் மாறி மாறி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். பிரபல கட்சிகளிர் பிரமுகர்கள் கட்சி மாறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து வெளியேறி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் பேராவூரணி திலீபன். இவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பேராவூரணி திலீபன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் முக்கியமானவரும், கட்சியின் முதுகெலும்பாகவும் கூறப்பட்ட பேரா.கல்யாணசுந்தரம் கட்சியில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவின் இணைந்தார்.
நாம் தமிழர் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்தவர் ராஜீவ்காந்தி. சமூக வலைத்தளங்களில் சீமானுக்கு படைத்தளபதியாக செயல்பட்டவர். சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். இதையடுத்து திமுகவுக்காக சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்கள், பொதுக்கூட்டங்கள், பயிற்சி பாசறைகள் என பல தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இயங்கி ஆனித்தரமான வாதங்களை முன்வைத்து குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு திமுகவில் மாணவர் அணித்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல் அதிருப்தி அளிப்பதாக கூறியும், அவரது பேச்சை கண்டித்தும் அக்கட்சியின் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரான வினோத் ராஜசேகரன், இளைஞர் பாசறை செயலாளர் இமானுவேல் பழனி, தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தொழிற்சங்க செயலவாளர் டேவிட் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட நிர்வாகிகளுடன் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவில் இணைந்தனர். சீமானை நம்பி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் மண்மீது வீடுகட்ட விரும்பவில்லை பாறை மீது வீடுகட்ட விரும்புகிறோம். தற்போது சரியாக இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம் என்று கூறினார்.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தனித்து களம் கண்டது நாம் தமிழர் கட்சி. விரைவில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு பலர் தாவி வருகின்றனர். அதிமுகவிற்கும் மாற்று கட்சியைச் சேர்ந்த பலர் வருகை தருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தம்பிகளாக வலம் வந்தவர்கள் பலரும் இன்றைக்கு அக்கட்சியில் இருந்து வெளியேறி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு விக்கெட்டுகளாக விழுவது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்த பேராவூரணி திலீபன், நாம் தமிழர் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். அவரது பேச்சு இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணியில் இணைந்துள்ளார் பேராவூரணி திலீபன்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications