தொமுச போல திமுகவில் "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" தொடங்கலாமே.. பெரியாரிஸ்டுகள் ஐடியா
திமுகவில் "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" தொடங்கலாம் என்பது பெரியாரிஸ்டுகள் யோசனை.
சென்னை: திமுகவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் போல புலம் பெயர் வட மாநில தொழிலாளர் கழகம் ஒன்றை தொடங்கலாம் என பெரியாரிஸ்டுகல் யோசனையை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், வட மாநிலத்தவர் வருகை தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

தமிழகத்தின் தொழில் நிறுவனங்களில் வட இந்தியர்கள் பணிபுரிவதும் இயல்பானதாகிவிட்டது.
ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை, தமிழ்நாட்டில் தமிழரின் வேலைவாய்ப்பை வட இந்தியர்கள் அல்லது வட மாநிலத்தவர் பறிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் இந்த கட்சிகளின் கோரிக்கை.
இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வட மாநில தொழிலாளர்களால் தமிழர் நிலம் பறிபோகிறது; தமிழர் ஆட்சி அதிகாரம் பறிபோகப் போகிறது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு சிறப்பு ரயில் மூலம் வட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இல்லை எனில் வட மாநிலத்தவர் மீது பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்கள் கடத்தல் என பல வழக்குகள் போடப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்களுக்கு ஆபத்து என வதந்தி காட்டுத்தீயாக பரவியது. ஆனால் தமிழ்நாடு அரசும் போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு இந்த வதந்தியை கட்டுப்படுத்தி உள்ளனர். இத்தகைய வதந்தியில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சிலர் தொடர்ந்து வதந்திகளை பரப்புவதால் சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்,
இதனிடையே வட இந்தியர்கள் வருகை, பங்களிப்பு தவிர்க்க இயலாத என்ற நிலையில் தொமுச போல திமுகவில் "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" ஒன்றை தொடங்கலாம் என பெரியாரிஸ்டுகள் யோசனையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக பெரியாரிஸ்ட் அதி அசுரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தி.மு.க.வின் முன்னணி அமைப்பாக "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" என்பது போன்ற ஒரு அமைப்பைத் தொடங்க வேண்டிய மிக மிகச் சரியான காலம் இது.
1.பிற மாநிலத் தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் பாதுகாப்பிற்காகவும்,
2. எதிர்காலத்தில் அவர்களது வாக்கு திராவிட இயக்கங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்கவும்,
3. இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களாக வாழும் திராவிடர் இன மக்களின் அரசியல் விடுதலை அமைப்பாக தி.மு.க.உருவாகவும்
இந்தத் துணை அமைப்பு மிக மிக அவசியம். இந்தி நன்கு தெரிந்த தோழர்களைப் பொறுப்பாளர்களாக நியமிப்பதும் அவசியம் என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications