Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி பற்றி பேச அனுமதி கேட்டால், பேரவையிலிருந்தே வெளியேற்றி விட்டார்கள்: எடப்பாடி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கொடுக்கவில்லை. சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் இல்லை. பேச வேண்டி அனுமதி கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்ததால் எங்களை வெளியேற்றியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் பிரச்சினையை பேசவிடாமல் எங்களை ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டத்துக்குரியது என்றும் கூறினார்.

தமிழக சட்டசபை நேற்று காலை 10. 00 மணிக்கு கூடியது. அப்போது தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது.

assembly kallakurichi liquor death tamil nadu AIADMK Tamil Nadu Assembly session Edappadi Palaniswami

இதில் அதிமுக மற்றும் இதர கட்சிகளின் எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்ததில் 48 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஆளும் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிமுக தெரிவித்து உள்ளது. அவை தொடங்கியதும் இந்த விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதம் நடத்த கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை கேள்வி நேரம் என்றும், கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்தப்படும் என்று கூறினார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக, பாமக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறி பதாகைகளை ஏந்தி தர்ணா செய்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமாரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றப்பட்டனர். அப்போது கூறிய அப்பாவு, "விவாதம் நடத்த அனுமதியில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. கேள்வி நேரம் முடிந்த பின்னர் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று தான் கூறினோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் தான் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் அதிமுகவின் அவையில் பங்கேற்க அனுமதி இல்லை" என்றார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கொடுக்கவில்லை. சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் இல்லை. பேச வேண்டி அனுமதி கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்ததால் எங்களை வெளியேற்றியுள்ளனர். மக்களின் பிரச்சினையை பேசவிடாமல் எங்களை ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "உண்மையான செய்தியை மாவட்ட ஆட்சியர் சொல்லியிருந்தால் இவ்வளவு உயிர்கள் பறிபோகியிருக்காது. பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். இவ்வளவு உயிர்கள் பறிபோகியதற்கு காரணம் அரசாங்கம். இதற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

29.03.2023 அன்று அவையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் குமார் அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்து அதன் மீது விசாரணை செய்யப்பட்டு இருந்தால் இன்றைக்கு இத்தனை உயிர்கள் போயிருக்காது.

இதற்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தான் காரணம். ஏனென்றால் கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியிலேயே எப்படி 3 வருஷங்களாக கள்ளச்சாராயம் விற்க முடியும். நாங்கள் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக கவுன்சிலர்கள் 2 பேர் முக்கிய காரணம் என்று அந்த மக்கள் சொன்னாங்க.. ஆனால் அவர்கள் மீது இப்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அவர்களது வீட்டு கதவுகளில் திமுக கட்சி புகைப்படம் உள்ளது என்று ஒரு போட்டோவை எடுத்து காண்பித்தார். அப்படியென்றால் ஆளுங்கட்சி கள்ளச்சாராயம் விற்பதற்கு துணை போகுது என்பது நிரூபணம் ஆகிறது. இன்றைக்கு 50 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது. இன்னும் பலர் அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத கட்சி கூட்டணி கட்சி. எவ்வளவு பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை பார்த்தால், என்ன நடந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்ற போக்கில் உள்ளது. மக்கள் மீது அக்கறையின்றி ஆட்சி அதிகாரத்திற்காக திமுகவுடன் 25 வருஷமாக கூட்டணியில் இருக்கிறார்கள். மற்ற திமுக கூட்டணி கட்சிகளும் இதற்கு எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்காங்க.

தூத்துக்குடியில் 2 பேர் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது இறந்தார்கள் என்று அதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று அப்போது ஸ்டாலின் கூறினார். இப்போது 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கும் சிபிசிஐடி விசாரணை வேண்டும். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்துள்ளனர். பல பேர் கண்பார்வையை இழந்துள்ளனர்.

எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழக்க காரணம் தமிழக அரசு தான், பொம்மை முதல்வர் ஸ்டாலின் தான். எனவே இதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவ்வாறு எடப்பாடி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+