நாளை வானில் நடக்கும் மேஜிக்.. ஜொலிக்கப்போகும் விண்வெளி! பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: பெர்சிட் விண்கல் மழை நாளை உச்சத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே நாளை இரவு வானில் ஒரே நேரத்தில் சுமார் 100 விண்கற்கள் வரை பொழியும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இந்த விண்கல் மழை நீடிக்கும். இந்த ஆண்டில் நாளை இந்த விண்கல் மழை உச்சத்தை எட்டும்.

பெர்சிட் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை போர்வை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்த விண்கற்கள் பெர்சியஸ் விண்மீன் கூட்டத்திலிருந்து வருவதைப் போலத் தெரிவதால்தான் இதற்கு இந்த பெயர். ஸ்விஃப்ட்-டட்டில் எனும் வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி போகும் போது அதன் தூசிகளை போகும் வழியில் விட்டு சென்றிருக்கிறது. இந்த தூசிகளுக்கு அருகில் பூமி வரும் நேரத்தில், பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இந்த தூசிகள் பூமிக்குள் விழுகின்றன.
மணிக்கு 2,15,000 கி.மீ வேகத்தில் விழும் விண்கற்கள் வளிமண்டலத்தில் உரசி தீப்பிடித்து எரிந்து விடும். இது பார்ப்பதற்கு விண்கல் மழை போன்று தோன்றும். மிகவும் ரம்மியமாக இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 100 விண்கற்கள் இந்த விண்கல் மழையில் தென்படும்.
வெப்பமான கோடை இரவுகள் இந்த விண்கல் மழையைக் காண்பதற்கு ஏற்ற சூழலை வழங்குகின்றன. எனினும், இந்த ஆண்டு உச்சம் தொடும் இரவில் சந்திரன் 84% முழுமையுடன் பிரகாசிப்பதால், விண்கற்கள் சற்றே மங்கலாக தெரியலாம். அதிகப் பிரகாசமான விண்கற்கள் அதிகாலையில் தோன்றினாலும், நிலவொளி இந்த விண்கற்களின் பிரகாசத்தை குறைத்துவிடும்.
சிறந்த அனுபவத்தைப் பெற, நகரத்தின் விளக்குகளில் இருந்து விலகிச் சென்று, சுமார் 30 நிமிடங்கள் கண்களை இருளோடு பழக்கப்படுத்தி, விண்கல் மழையை ரசிக்கலாம். விண்கல் மழையைப் பற்றிய நாசாவின் தகவல்களைக் காண, "NASA Solar System (@NASASolarSystem) August 1, 2025" என்று தேடலாம்.
பெர்சிட் விண்கல் மழை பிரகாசமான விண்கற்களான 'ஃபயர்பால்ஸ்' என்று அழைக்கப்படும் ஒளிப்பிழம்புகளுக்காகப் பெயர் பெற்றது. இவை பெரிய துகள்களால் ஏற்படுகின்றன, மேலும் சாதாரண விண்கற்களைவிட இவை மிகவும் பிரகாசமாக தெரியும்.
எப்போது, எங்கே பார்க்கலாம்?
பெர்சிட்ஸ் விண்கல் மழையைப் பார்க்க, வானத்தின் பெரும்பகுதியை பார்க்கும் வகையில் நேராக மேலே பார்க்கவும். விண்கற்கள் பெர்சியஸ் நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வருவதாகத் தோன்றினாலும், நீண்ட வால் கொண்ட விண்கற்களைப் பார்க்க இந்த மையப் புள்ளியிலிருந்து விலகிப் பார்ப்பது நல்லது.
W வடிவ நட்சத்திரக் கூட்டமான காசியோபியாவைக் கண்டுபிடித்து, அதன் கீழே பார்த்து பெர்சியஸ் நட்சத்திரக் கூட்டத்தை அடையாளம் காணலாம். இரவு 10 மணி முதல், குறிப்பாக அதிகாலை நேரங்களில் பெர்சிட்ஸ் தெரியும்.
சென்னையில் இருக்கிறீர்கள் எனில், ஒளி மாசு காரணமாக உங்களால் விண்கல் மழையை பார்க்க முடியாமல் போகலாம். எனவே வேலுர் அல்லது திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு சென்றால் சிறப்பாக பார்க்க முடியும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications