உங்கள் பிளட் குரூப் என்ன? நீங்கள் எப்படிப்பட்டவர்னு நாங்கள் சொல்றோம்!
சென்னை: ஒருவரின் முகத்தை வைத்தும், அவர் பேசுவதை வைத்தும் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிடலாம். உடல்மொழியை கொண்டும் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தும் ஒருவர் நல்லவரா கெட்டவரா என தெரிந்து விடும்.
மிஞ்சி போனால் அவருடன் கொஞ்ச நாள் பழகினாலே போதும், உண்மை வெளியே வந்துவிடும். ஒருவரின் குணாதிசயம் தெரிந்தால் அடுத்தவர் அவரிடம் எப்படி பழக வேண்டும் என்பதை புரிந்து நடந்து கொள்ளலாம்.

ஆனால் ஒருவருடைய ரத்த வகையை வைத்து ஒருவரின் குணத்தை அறிய முடியுமா? இது ஜப்பானில் பிரபல டெக்னிக்காம். தற்போது உலகமெங்கும் வியாபித்து வருகிறது. இதன் பெயர் கெட்சூகி கட்டா (Ketsueki Gata) என்கிறார்கள். ஒரு தோற்றத்தை வைத்து ஒரு நபரின் குணங்களும் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ரத்த வகை AB
உங்களது ரத்த வகை ஏபி என வைத்துக் கொள்ளுங்கள், அப்படியென்றால் நீங்கள் ஒரு சில விஷயங்களில் ஆராய்ந்து முடிவெடுப்பவராக இருப்பீர்கள். அது போல் ராஜாங்க ரீதியாக அணுகுவீர்கள். எதையும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். யாரிடமும் பேசாமல் அமைதியாக உள்ளுக்குள் எதையாவது நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். அதே நேரத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நீங்கள் கோபத்தையும் எரிச்சலையும் கொட்டக் கூடியவர்கள். நீங்கள் இரட்டை ஆளுமை திறனுடையவர்களாக இருக்கலாம்.
ரத்த வகை A
உங்களுடைய ரத்த வகை ஏ என வைத்துக் கொண்டால் நீங்கள் அடிக்கடி உணர்ச்சிவயப்படுவீர்கள். விசுவாசமாக இருப்பீர்கள். அமைதியாகவும் எந்த செயலையும் முன்னேற்பாடுகளுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுடன் இருப்போருக்கு ஒத்துழைப்பு நல்குவீர்கள். திட்டம் தீட்டுவதில் வல்லவர், இரக்க குணம் அதிகம். பொறுப்பாளி, நம்பிக்கைக்குரியவர். எதை செய்தாலும் சரியாக செய்து முடித்துவிடுவீர்கள். மிகவும் புத்திசாலியாக இருப்பீர்கள்.
ரத்த வகை B
உங்களுடைய ரத்த வகை பி குரூப்பாக இருந்தால் நீங்கள் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல், மனதிற்கு பட்டதை பளிச்சென சொல்லிவிடுவீர்கள். நம்பிக்கையானவர்களாக இருப்பீர்கள். எதை செய்தால் சிறப்பாக செய்வீர்கள். எந்த வேலையையும் 100 சதவீதம் மனப்பூர்வமாக செய்வீர்கள். ஆனால் உங்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியாது.
ரத்த வகை O
உங்களது ரத்த வகை ஓ வாக இருந்தால் நீங்கள் ஒரு லட்சியத்துடன் வாழ்வீர்கள். அது போல் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக காலத்தை தள்ளுவீர்கள். தைரியம், தன்னம்பிக்கை உங்களிடம் நிறையவே உண்டு. கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள தங்களுக்கு விதித்துக் கொண்ட விதிகளை கூட தகர்த்து எறிவீர்கள்.
என்ன இந்த ஜோதிடத்தை நம்புகிறீர்களா, உங்கள் ரத்த வகை என்ன, உங்கள் ரத்த வகைக்கானதை பார்க்கும் போது உங்கள் குணத்துடன் ஒத்து போகிறதா, கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications