உங்கள் காலில் கட்டை விரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருக்கா? நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?
சென்னை: உங்கள் கால் கட்டை விரலை விட இரண்டாவது விரல், அதாவது மெட்டி போடும் விரல் நீளமாக இருக்குமா, அப்படி என்றால் உங்கள் குணாதிசயம் என்ன தெரியுமா?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். 5 விரல்களும் ஒன்றாக இருக்காது. அது போல் ஒட்டியே பிறந்திருந்தாலும் அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருக்க மாட்டார்கள். அது போல் ஒருவரது குணத்தை முகத்தை பார்த்தாலே தெரியும்.

சிலரது பாடி லேங்குவேஜை வைத்தும் சொல்லிவிடலாம். அது போல் யார் யார் எப்படி என்பது குறித்து கால் விரல்களின் வடிவத்தை வைத்தே சொல்லிவிடலாம். பாதங்களின் வளைவுகளில் இருந்து கால் விரல்களின் வடிவம் வரை நமது ஆளுமை குறித்த பல நுணுக்கமான தகவல்கள் மறைந்துள்ளன.
சதுர வடிவ பாதம்: கொண்டவரா நீங்கள்? அதாவது கால் விரல்களும் ஒரே அளவில் இருக்கும். அப்படி இருந்தால் நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? யதார்த்தமும் நம்பகத்தன்மையும் நிறைந்தவர். நேரத்தையும் உங்களிடம் இருக்கும் திறமைகளையும் சரியாக பயன்படுத்துவீர்கள். நீங்கள் ஒரு கடுமையான உழைப்பாளி. கொடுத்த வாக்கை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்களோடு சகஜமாக பழகக் கூடியவராக இருப்பதால் எளிதாக அடுத்தவரோடு நட்பு பாராட்டுவீர்கள்.

ரோமன் பாதம்: அதாவது உங்கள் காலின் முதல், இரண்டாவது, மூன்றாவது ஆகிய விரல்கள் ஒரே உயரத்தில் இருக்கும். அடுத்த இரு விரல்கள் குட்டையாக இருக்கும். இதற்குதான் ரோமன் பாதம் என்பார்கள். இப்படிப்பட்ட பாதம் இருந்தால் நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? அடுத்தவர்களோடு எளிதாக பழகக் கூடியவர். புதிய மனிதர்களை சந்திக்கவும் அவர்களோடு நட்பை வளர்த்துக் கொள்ளவும் ஒரு போதும் தயங்க மாட்டீர்கள். உங்கள் கருத்தில் தன்னம்பிக்கையாகவும் உறுதியாகவும் இருப்பீர்கள்.

எகிப்து பாதம்: உங்கள் கால் பெருவிரல் நீளமாகவும் மற்ற விரல்கள் 45 டிகிரிக்கு குட்டையாகவும் இருந்தால் அதுதான் எகிப்து பாதம் ஆகும். இந்த பாதம் கொண்டவர்கள் சுயமாக யோசிக்க கூடியவர்கள். பிடிவாதம் அதிகமாக இருக்கும். அப்படி பிடிவாத குணம் இருந்தாலும் படைப்பாற்றல் அதிகமாகவே இருக்கும். அடுத்தவர்களை உங்கள் வழிக்கு கொண்டு வருவதில் உங்களுக்கு சாமர்த்தியம் இருக்கும். அடுத்தவர்கள் கூறும் ரகசியங்களை யாருக்கும் சொல்லாமல் இருப்பதன் மூலம் நம்பகத்தன்மை கொண்டவராக அறியப்படுகிறீர்கள்.

கிரேக்க பாதம்: உங்கள் கால் கட்டை விரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால் அதை கிரேக்க பாதம் என அழைப்பார்கள். இதை நெருப்பு பாத வடிவம் என்றும் அழைப்பதுண்டு. இந்த பாதம் உள்ள நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? படைப்பாற்றலும் உணர்ச்சிமிக்கவருமான நீங்கள் உள்ளுணர்வோடு இயங்குபவராக இருப்பீர்கள். சாகசங்களை புரிய விரும்புவீர்கள். எந்த சவால்களுக்கும் தயாராக இருப்பீர்கள்.













Click it and Unblock the Notifications