இது மட்டும் நடந்தா டிராபிக்கே இருக்காதே.. ரெடியான பெருங்களத்தூர் பாலம்! சென்னைக்கே பெரிய குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருங்களத்தூர் பாலத்தின் இன்னொரு பகுதியின் கட்டப்பட்டு முடிவுற்றுள்ளது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் வருகிறார்கள். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

பொதுவாக இந்த பேருந்துகள் இரண்டு - மூன்று ரூட்களை பயன்படுத்துவது வழக்கும். பெருங்களத்தூர் வழியாக கிண்டி, வடபழனி என்று வருவது ஒரு வகை.

Perungalathur flyover works are done: Chennai people are waiting for it to be opened

இரண்டாவது ஓஎம்ஆர் வழியாக கிண்டி, வடபழனி வழியாக கோயம்பேடு வருவது இன்னொரு பக்கம். கடைசியாக சில பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக செல்லும். இதனால் வடபழனி, கிண்டி செல்ல விரும்பும் பயணிகள் நேரடியாக செல்ல முடியாமல் கோயம்பேட்டில் இறங்கி செல்ல வேண்டி இருக்கும்.

கோயம்பேட்டில் இறங்கி மெட்ரோவிலோ அல்லது ஆட்டோ, பஸ்ஸிலோ செல்ல வேண்டி இருக்கும். இந்த நிலையில்தான் மக்கள் எளிமையான போக்குவரத்து பயன்பாட்டிற்காக பெருங்களத்தூர் வழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெருங்களத்தூர் இதனால் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகும்.

பல கிலோ மீட்டர்களுக்கு கார்கள், பேருந்துகள் வரிசையில் நிற்கும் அளவிற்கு பெருங்களத்தூர் பாதை டிராபிக் ஜாம் ஆகும். இந்த நிலையில்தான் அங்கே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி 1. தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வழியாக பாலம் 2. வண்டலூரில் இருந்து தாம்பரம் செல்லும் திசையில் பாலம் 3. சதானந்தபுரம், நெடுங்குன்றம் வழியாக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை செல்ல பாலம் 4. பெருங்களத்தூர் ரெயில்வே தண்டவாளத்தின் மேல்புறம் வழியாக பழைய பெருங்களத்தூர் பகுதிகளுக்குள் செல்ல பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் வண்டலூரில் இருந்து தாம்பரம் செல்லும் திசையில் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த பாலம் திறக்கப்பட்டது. தாம்பரம்-வண்டலூர் சாலையின் இரு திசைகளிலும் இந்த 1.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வந்த பாலத்தில் ஒரு பக்கம் பணிகள் முடிந்த நிலையில் இன்னொரு பக்கம் பணிகள் நடந்து வருகிறது.

பாலம் திறக்கப்படவில்லை: இந்த நிலையில்தான் பெருங்களத்தூர் ரெயில்வே தண்டவாளத்தின் மேல்புறம் வழியாக பழைய பெருங்களத்தூர் பகுதிகளுக்குள் செல்ல பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் பணிகள் முடிந்துவிட்டன.

ஆனாலும் இன்னும் இந்த பாலம் திறக்கப்படவில்லை. இது திறக்கப்பட்டால் பெருங்களத்தூர் ரெயில்வே தண்டவாளத்தின் மேல்புறம் வழியாக பழைய பெருங்களத்தூர் பகுதிகளுக்குள் மக்கள் எளிதாக செல்ல முடியும். இந்த பாலம் திறக்கப்பட்டால் ரயில்வே கேட்டிற்கு நிற்காமல் மக்கள் செல்ல முடியும்.

ஆனால் பாலம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் இங்கே 30 நிமிடங்கள் வரை கேட் திறக்க காத்து இருக்கிறார்கள். இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பாலத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ரூ.235 கோடி மதிப்பில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து முடிந்து உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பாலத்திற்கான கட்டுமானம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+