பெருங்களத்தூர் பிஸி.. பொத்தேரி திணறுது.. இனி காட்டாங்கொளத்தூர் ஈஸியா போலாம்! சென்னைக்கு 2 குட்நியூஸ்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டு வருவதால், இதற்கான தீர்வு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.. புதிய புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருவதால் வேலை தேடி வருவோரின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

உயர்மட்ட பாலம்: இதனால், சென்னையில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இதனை தவிர்க்க நிறைய மேம்பாலங்களும், உயர்மட்ட பாலங்களும், கட்டப்பட்டிருக்கின்றன.. இதைத்தவிர, கூடுதலான உயர்மட்ட மேம்பாலங்களின் கட்டுமான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்குநடுவில்தான், கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்டு, கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.. இதனால் சென்னைக்குள் நெரிசல் குறைந்தாலும், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் வாகன நெரிசல் முன்பைவிட இப்போது கூடுதலாகவே அதிகரித்துவிட்டது. ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டிருப்பதால், இதற்கான பணிகள் விரைவிலேயே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தாம்பரம்: அதேபோல, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலையாக உயர் மட்டமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட போகிறதாம். இதற்கு பதிலாக, கிளாம்பாக்கம், அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
இதன் மூலம் வாகனங்கள் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் காட்டாங்கொளத்தூருக்கு செல்லாமல் பயணம் செய்யமுடியும். இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேம்பாலங்கள்: இந்த மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதேபோல, இதற்கான இறுதி அனுமதி கிடைத்ததுமே, மேம்பாலப்பணிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.. அதுபோலவே, மறைமலைநகர், போர்டு தொழிற்சாலை, சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திராசிட்டி பகுதியிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும், 6 வழிப்பாதையாகவும் அமைய உள்ளன.
இந்த உயர்த்தப்பட்ட மேம்பாலம் மட்டும் வந்துவிட்டால், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூருக்கு செல்லாமல் பயணம் செய்யமுடியும் என்று வெகுவாக நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications