பெருங்களத்தூர் டூ ஜிஎஸ்டி ரோடு.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் "ஸ்டேஷன்" வருதாமே.. ஸ்டன் ஆன சென்னை
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்போது, பயணிகள் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, கண்காணிப்பு கேமிரா பொருத்தம் என பல்வேறு வசதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில் இன்னொரு அதிரடிகளையும் அரசு கையில் எடுத்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்தும் பணி துரிதமாகி உள்ளது..

ஜிஎஸ்டி ரோடு: அதேபோல, இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டு அருகில், சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
ரயில்வே ஸ்டேஷன்: மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியும் ஆரம்பமாக போகிறது.. கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ ஒதுக்கியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு அதிரடியையும் தமிழக அரசு தற்போது கையிலெடுத்துள்ளது.. அதோவது, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் புதிதாக நவீன வசதிகளுடன் போலீஸ் ஸ்டேஷன் அமைய இருக்கிறதாம்.. இதற்கான டெண்டரையும் சிஎம்டிஏ கோரியிருக்கிறது. சுமார் 7,380 சதுர அடி பரப்பளவில் புதிய போலீஸ் நிலையம் அமைய உள்ளது
கன்ட்ரோல் ரூம்: ஒரே இடத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, கண்காணிப்பு கேமிரா மையம், ஆயுதங்கள் வைப்பு அறை, கட்டுப்பாட்டு அறை, கீழ்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடம், முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பஸ் ஸ்டாண்டு கட்டப்பட உள்ளது.. அதனால்தான் போலீஸ் ஸ்டேஷனையும் இங்கேயே கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதற்காக மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற போகிறார்களாம்.. இவர்கள் கன்ட்ரோல் ரூமில் இருந்தபடியே, பயணிகளின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கவும் போகிறார்களாம்.
பெருத்த நிம்மதி: ஆகமொத்தம், நவீன வசதியுடன் இந்த கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் அமைய போவதுடன், பஸ் ஸ்டாண்டின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நவீன பாதுகாப்பு வசதிகள் எல்லாம், பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications