தேசிய கீதத்தை யார் அவமதித்தது? ஆதாரம் காட்டும் பீட்டர் அல்போன்ஸ்?
சென்னை: தேசிய கீதத்தை முதலில் அவமதித்தவரே ஆளுநர் ரவிதான் என பீட்டர் அல்போன்ஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்குமான மோதல் போக்கு முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. நேற்று கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறினார் ஆளுநர்.
அவரது நடவடிக்கை மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பி உள்ளது. மூத்த பத்திரிகையாளர்கள் பலர் அவை மரபுக்கு மாறாகவே ஆளுநர் ரவி நடந்து கொண்டுள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு உடனடியாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தேசிய கீதம் அவை தொடங்கும் போதும் இறுதியிலும் இசைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் வைத்திருந்ததாகவும், அதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆளுநர் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களை பிரதிபலிக்க வேண்டும். இதைத் தவிர்த்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பாகுபாடான அரசியல் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக இருக்கக் கூடாது என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.
'பாகுபாடான அரசியல் கருத்துகள்’ என்று ஆளுநர் எதைக் குறிப்பிட்டுள்ளார் என்பது அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். விளக்க வேண்டும் என்றால், 'திராவிட மாடல்’ போன்ற சொற்களைத்தான் அவர் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் எனப் புரிகிறது.
ஆனால், வழக்கம் போல் ஆளுநர் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள், அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ அதைத்தான் ஆளுநர் செய்ய முடியும். உரையைத் தயாரிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உரியது. அதை அப்படியே படிக்கும் அதிகாரம் பெற்றவர்தான் ஆளுநர். அவருக்கு என்று தனி கருத்து எதுவும் சட்டத்தில் கூறப்படவில்லை என்கிறார்கள்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் அல்போன்ஸ் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார்.
இந்தச் சர்ச்சை குறித்து அவர்,“தேசிய கீதம் இசைக்கப்படவில்லை; எனவே வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்கிறார் ஆளுநர். தேசிய கீதத்தை அவமதித்ததே முதலில் இவர்தான். கடந்த முறை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய போது ஆளுநர் உரைக்குப் பின்னர் அவையில் இறுதியாகத் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அப்படி ஒலிக்கும்வரை காத்திராமல் அவமதித்துவிட்டு பாதியிலேயே வெளியே சென்றவர்தான் இந்த ஆளுநர்.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து. கட்சியில் தேசிய கீதம். இதுதான் அவை மரபு. காலங்காலமாக அப்படித்தான் இருந்து வருகிறது. தேசிய கீதத்தைக் காரணம் காட்டி அவர் செய்த மாபெரும் தவறை மறைக்கப்பார்க்கிறார்.
ஆளுநர் உரை என்பது அவரது நம்பிக்கை, அவர் சார்ந்துள்ள கொள்கைகளைச் சொல்லுகின்ற உரையல்ல. ஆளுநர் உரை என்பது தமிழ்நாடு அரசு தயாரிக்கின்ற உரை. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு தயாரிக்கின்ற உரை.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் படி It is a sovereign government. அந்த அரசு கொடுக்கும் உரையைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும். இவர் அதைப் படிக்க மாட்டேன் என்று சொல்வது, அவருக்கு ஆளுநர் பதவியை வகிக்க, எனக்கு ஆசை இல்லை, விருப்பம் இல்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
அவர் வேண்டுமானால் அரசுக்குத் தெரிவிக்கலாம். 'என்னால் அரசுக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மாநில அரசு தயாரிக்கின்ற உரைகளை என்னால் படிக்க முடியவில்லை.
இந்த மாநில அரசுடன் இணைந்து என்னால் வேலை செய்ய முடியவில்லை. ஆகவே என்னை வேறு பணிக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுகிறேன்’ என்று அவர் கேட்டால் அதுவே சிறப்பானதாக இருக்கும்.
எனவே இந்த ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

சட்டமன்றம் என்பது தன்னாட்சி உரிமை பெற்றது. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம். அதை இந்த ஆளுநர் அவமதிப்பது என்பது இந்திய அரசியல் வரலாற்றில் மற்றும் அல்ல தமிழக ஆளுநர்கள் சரித்திரத்தில் இது ஒரு கரும்புள்ளி.
அரசியல் சாசனம் என்ன சொல்கிறது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மாநில அரசின் கொள்கைகளை மீறி ஆளுநர் செயல்படுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மாநில அரசு எழுதித் தந்துள்ள உரையில் உள்ளக் கருத்துகள் எனக்கு உடன்பாடு இல்லை என்றார் ஆளுநர். அவருக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் எழுதப்படவில்லை. அரசு தயாரிக்கின்ற எந்தக் கருத்துகளிலும் உங்களுக்கு உடன்பாடு இருக்கவேண்டும் என்பதுதான் சட்டம்.
குடியரசு உரையை யார் தயாரிக்கிறார்? முர்முவா தயாரிக்கிறார்? ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுக்கிறது. அந்த உரையைக் குடியரசுத் தலைவர் படிக்கிறார்” என்று கூறுகிறார்
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications