தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்
சென்னை: தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணி காத்திட, உரிமைகளைப் பாதுகாக்க 1989-ம் ஆண்டு டிசம்பர் 13-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின்படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது.

தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1989, 1991 சட்டசபை தேர்தல்களில் தென்காசி தொகுதியில் இருந்தும் 2006-ம் ஆண்டு கடையநல்லூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பீட்டர் அல்போன்ஸ். ராஜ்யசபா எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்தார்
தற்போதைய திமுக அரசில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் நல ஆணைய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு ஆணையங்கள், வாரிய தலைவர்கள் பதவிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி- பீட்டர் அல்போன்ஸ்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு எனது நெஞசார்ந்த நன்றி. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருப்பேன்!
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டிருக்கிறார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications