இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பதா? ஆளுநர் ரவிக்கு பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்!
சென்னை: இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி நச்சு விதைகளை விதைப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் தன்னிச்சையாக உரையை வாசித்த விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும் இந்தப் போராட்டங்களில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே சென்னை ஆளுநர் மாளிகையில் இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக எண்ணித் துணிக என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி பேசுகையில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி பிரச்சனைகளின் போது மத்திய அரசு பக்கம்தான் நிற்க வேண்டும். மத்திய அரசு சொல்வதைத்தான் அந்த அதிகாரி கேட்க வேண்டும். அதிகாரிகள் என்பவர் குடிமைப் பணிக்காக மத்திய அரசால்தான் தேர்வு செய்யப்படுகிறவர்கள் என கூறியிருந்தார்.
மேலும் மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. ஒன்றிய அரசு என்பதை அரசியலாக்கும்போது தான் பிரச்னை எழுகிறது. ஒன்றிய அரசு என்று அவமரியாதையாக அழைக்கின்றனர். அதுதான் பிரச்சனைக்கு காரணம். இந்தியா என்பது பல்வேறு இனக்குழுக்கள், பல கலாசாரங்களுட வாழுகிற நாடு. ஒரே இன மக்கள் மட்டுமே வாழ்கிற பகுதியும் அல்ல. ஒரே பகுதியில் ஒரு இனக்குழு வாழ்கிறது என்பதற்காக நாம் அந்த பகுதியை அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட முடியாது எனவும் ஆளுநர் ரவி பேசியிருந்தார்.
இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ரயில் தண்டவாளங்களைப் போன்று ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒன்றாகப் பயணித்தால்தான் இந்திய அரசியல் சாசனச் சட்டம் செயல்படும். இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சுவிதைகளை விதைப்பதை அனுமதிக்கக்கூடாது.ராஜ்பவனில் நடக்கும் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் யார் செலவில் நடக்கின்றன? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,தேச ஒற்றுமைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரான இதைப்போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளை உடனடியாக குடியரசு தலைவர், பிரதமர்,உள்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

ராஜ்பவனில் நடக்கும் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் யார் செலவில் நடக்கின்றன? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,தேச ஒற்றுமைக்கும் கூட்டாட்சி த்த்துவத்திற்கும் எதிரான இதைப்போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளை உடனடியாக குடியரசு தலைவர், பிரதமர்,உள்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications