சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏப்.14-க்குப் பின் அனைத்து கூட்டு வழிபாடு- ஆராதனை- தொழுகை நிறுத்த வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் 14 லாக்டவுனுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் மறையும் வரை அனைத்து மத கூட்டு வழிபாடு, ஆராதனைகள் மற்றும் தொழுகைகளை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

ஒன்று கூடல்களில்தான் இந்தியாவில் அதிக அளவு கொரோனா தாக்கம் இருப்பது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அனைத்து மதவழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

Peter Alphonse urges to stop all mass group worships till india free from Coronavirus

இந்த நிலையில் டெல்லியில் மத மாநாடு ஒன்றில் பங்கேற்றவர்களால் கொரோனா அதிகம் பரவி இருப்பதும் தெரியவந்தது. இதனால் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது.

இதனிடையே ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பின்னர் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த பின்னணியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்.. 4 நாளில் இரண்டு மடங்கு அதிகரிப்பு இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்.. 4 நாளில் இரண்டு மடங்கு அதிகரிப்பு

அதில், ஏப்ரல் 14 க்கு பிறகு என்ன? மத வழிபாட்டுத் தலங்கள் வைரஸ் தொற்றுக்களை பரப்பும் மையங்களாக மாற விட கூடாது. வைரஸ் தொற்று முழுமையாக மறையும் வரை எல்லா கூட்டு வழிபாடுகளையும் ஆராதனைகளையும் தொழுகைகளையும் நிறுத்த வேண்டும். நமது பிரதமர் இதனை செய்வாரா? என கூறியுள்ளார்.

English summary
Congress Senior leader Peter Alphonse has urged to stop all mass group worships till india free from Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X