காலத்தின் கட்டாயம்.. ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம்! திமுக தேர்தல் அறிக்கை பற்றி கனிமொழியிடம் மனு
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க வேண்டும் என எம்பி கனிமொழியை சந்தித்து தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
2024 மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தி.மு.க தலைமை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கியது. சென்னையில் இந்த குழு தனது பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறது.

திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், கோ.வி.செழியன், மருத்துவர் எழிலன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருக்கின்றனர்.
இந்த குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் பற்றி கருத்துகேட்டு வருகிறது. அந்த கருத்துக்களை பரிசீலித்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கனிமொழி தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது.
அந்த மனுவில், "1. ஜாதி ஆணவபடுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
2. சுயமரியாதை & ஜாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய பெற்றோர் சம்மதம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் திருமணத்தை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
3. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடும் தொகையினை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்
4. இந்திய ஒன்றிய அரசு "அம்பேத்கர் பவுண்டேசன்" கீழ் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு வழங்கும் 2.5 லட்சம் தொகையை அனைத்து ஜாதிமறுப்பு இணையர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளர் ரமேஷ் பெரியார் தெரிவிக்கையில், "எங்கள் கோரிக்கையை மிக கவனமாக கேட்டுக்கொண்டார்கள். நிறைவேற்றி தருகின்றோம் என்று உறுதி அளித்தார்கள். நிகழ்வில் வணக்கத்துகுரிய சென்னை மேயர், T.K.S இளங்கோவன், எம்.எம்.அப்துல்லா, எழிலரசன், ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோரும் நம்பிக்கை தரும் விதமாக பேசினார்கள்." என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications