பெரியாரை பற்றி பேசவே ஆரம்பிக்கலையே... குண்டு போட வருவீங்களா? தீக்குளிச்சு சாவீங்க..அடங்காத சீமான்!
சென்னை: தந்தை பெரியார் குறித்து தாம் பேசவே தொடங்கவில்லை.. அதற்குள் என் வீடு மீது குண்டு வீச வருவீர்களா? நான் பெரியாரை பற்றி பேச தொடங்கினால் எல்லோரும் தீக்குளித்து செத்துவிடுவீர்கள் என பெரியார் தொண்டர்களை மீண்டும் மிரட்டி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தந்தை பெரியார் குறித்து ஆபாசமாகவும் இழிவாகவும் மிக மோசமான முறையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். தந்தை பெரியார் குறித்த சீமானின் இத்தகைய பேச்சுக்கு எதிராக 53 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் தந்தை பெரியார் பேசியதைதான் தாம் குறிப்பிட்டதாகவும் பெரியார் குறித்து இழிவாகப் பேசவில்லை என்றும் சீமான் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் 10 நிர்வாகிகளை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தந்தை பெரியாரை இழிவாக பேசி வரும் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்து: பெரியார் குறித்து நான் இன்னமும் பேசவே ஆரம்பிக்கவில்லையே.. அதற்குள் குண்டு போட வருவீங்களா? பெரியாரை யாரும் இழிவாக பேசவில்லை.. பெரியார் பேசியதை எழுதியதைத்தான் பேசினேன்.
அப்ப நான் பெரியாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நீ என்ன செய்வ? நீ என்ன தீக்குளித்து செத்து போவியா? என்ன பண்ணுவீங்க.. ஏய்..
இதற்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நானில்லை.. ஏதோ வேற வேலை இருக்கிறது.. அதனால் இடைவெளி விட்டிருக்கிறேன்.. மறுபடியும் ஆரம்பித்துவிடுவேன்.. பார்த்து அடக்கமா இருங்க.. தோண்டி தோண்டி எடுத்து என் முன்னாடி நிறுத்தாதீங்க.. இவ்வாறு சீமான் மிரட்டல் விடுத்தார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications