ரோட்டில் தான் விழுந்தது.. ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை -கூடுதல் போலீஸ் ஆணையர்
சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை எனவும், பெட்ரோல் குண்டு வீசியவர் யார்? அவரது பின்னணி என்ன? அவர் வீசிய பெட்ரோல் நிரப்பிய பாட்டில் எங்கு விழுந்தது? என்பது பற்றி சென்னை மாநகர தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றார். அவரை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அதோடு கைதானவரின் பெயர் கருக்கா வினோத் என்பதும், இவர் ஏற்கனவே சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த வழக்கில் சிறை சென்ற அவர் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்ததும், இதையடுத்து இன்று அவர் ஆளுநர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. நாளை ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி முர்மு வருகை தரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று நண்பகல் 3 மணிக்கு சர்தார் படேல் சாலையில் தொியாத நபர் ஒருவர் ராஜ்பவன் கேட் பக்கத்தை குறிவைத்து பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீச முயற்சித்தார். அப்போது பாதுகாப்பில் இருந்த காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். இருப்பினும் அந்த நபர் ஒரு பாட்டிலை வீசினார். அது உடைந்து போனது. அதில் இருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. கைது செய்யப்பட்ட நபரிடம் சில பாட்டில்கள் இருந்தன. அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்தார் படேல் சாலையில் தான் சம்பவம் நடந்துள்ளது. அங்கு தான் பாட்டில் விழுந்துள்ளது. யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவித சேதமும் வரவில்லை.
அந்த நபரிடம் விசாரித்தோம். அப்போது அவரது பெயர் கருக்கா வினோத். வயது 42. இவர் தேனாம்பேட்டையை சேர்ந்தவர். இவர் 2 ஆண்டுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தில் பாட்டில் வீசியுள்ளார். அதேபோல் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இதேபோல் சம்பவம் செய்துள்ளார். சமீபத்தில் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். காலை 10-12 மணிக்குள் மதுபானம் குடித்துள்ளார். அவர் பேலன்ஸாக இல்லை. தற்போது கைது செய்துள்ளோம். பாதுகாப்பு இருந்ததால் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள் ‛எந்த நோக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது' என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‛‛தற்போது விசாரணை நடத்தி வருகிறோம். அவர் ஸ்டேபில் ஆன பிறகு முழு விபரம் கண்டுபிடித்து அதுபற்றி சொல்ல உள்ளோம்'' என்றார். இதையடுத்து, ‛‛எத்தனை பாட்டில்கள் வீசப்பட்டன'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ஒரேயொரு பாட்டில் வீசப்பட்டுள்ளது போல் தெரிகிறது. 3 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் நடந்து வந்து தான் இதில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது திரியில் மட்டுமே தீ இருந்தது. இந்த நபர் மீது 7 க்கும் அதிகமான வழக்குகள் உள்ளது. கடைசியாக திநகரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவருக்கு எந்த பிரச்சனை உள்ளது என விசாரித்து வருகிறோம்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ஆளுநர் மாளிகை மீது இப்படி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு ஏதேனும் காரணமா? துறை ரீதியான விசாரணை நடத்தப்படுமா?'' என வினா எழுப்பினார். இந்த வேளையில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ‛‛ஆளுநர் மாளிகை மீது வீசப்படவில்லை. சர்தார் படேல் ரோட்டில் தான் பாட்டில் விழுந்துள்ளது. ஆளுநர் மாளிகையின் மெயின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள தடுப்புக்கு முன்பாக சர்தார் வல்லபாய் படேல் சாலையில் தான் விழுந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை. நல்ல பாதுகாப்பு காரணமாக தான் காவலர்கள் பிடித்துள்ளனர். அவர் ஆளுநர் மாளிகை பக்கமே வரவில்லை'' என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications