100-வது நாளை நோக்கி...சென்னையில் இன்றும் 1 லி.பெட்ரோல் ரூ102.63; 1 லி. டீசல் ரூ94.24-க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 92-வது நாளாக இன்றும் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 க்கும் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. நாட்டில் கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனையானது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் பின்னர் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் சிறு பகுதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2 முறைத்தது குறைத்தது. தமிழக அரசும் பெட்ரோல் விலையை ரூ3 குறைத்தது.
பின்னர் கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ9; டீசல் விலையில் ரூ7.50 என குறைத்தது மத்திய பாஜக அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைத்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை.
நாடாளுமன்ற லோக்சபாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கடுமையாக விவாதம் நடந்தது. தமிழக எம்.பி.க்களும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே இது தொடர்பாக தமிழில் காரசார விவாதம் நடைபெற்றது. இதேபோல் தமிழக அரசு மீது பாஜக இது தொடர்பாக புகார் தெரிவிக்கிறது. இதற்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பதிலடியும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இன்று 92-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ102.63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24ஆக விற்பனையாகிறது. ஆனாலும் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications