பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 - ரூ.28 வரை அதிகரிக்க வாய்ப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலைகள் ரூ.25 முதல் ரூ.28 வரை உயர வாய்ப்புள்ளதாக கோடக் இன்ஸ்டிடியூஷனல் எக்விட்டிஸ் (Kotak Institutional Equities) திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்து இருப்பதால் தான் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனால் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. இதனல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் இருப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கோடக் இன்ஸ்டிடியூஷனல் எக்விட்டிஸ் (Kotak Institutional Equities) தெரிவித்துள்ளது. இது கோடக் செக்யூரிட்டீஸ் லிமிடெட்டின் முக்கிய பிரிவாக செயல்பட்டு வருகிறது. நம் நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கி, முதலீட்டு மேலாண்மை மற்றும் புராக்கரேஜ் நிறுவனமாக உள்ளது. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
''கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் இறக்குமதி செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்திய கச்சா எண்ணெய் அளவுகளின் இறக்குமதி செலவு கணிசமாக உயர்ந்தது. இறக்குமதி அளவுகள் 13-15% குறைந்தபோதிலும், ஒரு நாளைக்கு 190-210 மில்லியன் டாலர் என இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைகள் மாறாமல் இருப்பதால், சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.270 பில்லியன் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.
தற்போது அரசியல் சூழலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இந்த சட்டசபை தேர்தல் ஏப்ரல் 29 ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு விலைகள் உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. அதன்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் 120 டாலராக ஆக இருக்கும் பட்சத்தில் தற்போதைய விலையை விட சுமார் ரூ.25 முதல் ரூ.28 வரை விலை உயர்த்தப்பட வேண்டும். அந்த வகையில் விலைகள் விரைவில் மாற்றம் செய்யப்படலாம்'' என கூறப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications