பெட்ரோல், டீசல் விலையில் 43வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 43வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. மற்ற பொருட்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
சில்லறை வர்த்தக பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. ஒவ்வொரு பொருட்களின் விளையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

நாடு முழுக்க பல்வேறு பொருட்களின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவிலும் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் தொடர்ச்சியாக 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
மார்ச் 6ம் தேதி வரை தினமும் பெட்ரோல் டீசல் விலை 30 பைசா முதல் 80 பைசா வரை தினமும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்கள் இடையே கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது. பல மாநிலங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளின் விலைகள் உயர்ந்தன.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மக்கள் கடுமையான புகார்களை வைத்தனர்.இது மக்கள் இடையே பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 43வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications