3வது நாளாக.. அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் கலக்கம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்து, இவ்வளவு விரைவாக அதுவும் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, நாளை (மே.7) பதவியேற்கவுள்ள சூழலில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் நிலை
பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா ஊரடங்கு ஒருபக்கம், சட்டமன்ற தேர்தல் ஒருபக்கம் என்ற சூழலில், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

விலை குறைப்பு
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பிருந்து, விலை ஏற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக தேர்தல் நடைபெற்ற காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

16 காசுகள் உயர்வு
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மக்கள் தலையில்
தேர்தல் முடியும் வரை சைலண்ட் மோடில் இருந்த பெட்ரோல், டீசல் விலை நிலவரம், இப்போது மீண்டும் தினமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனை நாட்கள் விலை ஏற்றப்படாததன் சுமையை, அடுத்தடுத்து விலை ஏற்றி சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications