30 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை.. வாகன ஓட்டிகள் பெரும் துயரம்
இன்று 30வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விற்பனையாகிறது
சென்னை: சென்னையில் 30வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதனிடையே, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை..

உக்ரைன் - ரஷ்யா
எனினும், சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது. போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டு எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது..

அதே விலை
அந்த வகையில், கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் தொடர்ந்து 30வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாநிலங்கள்
அதன்படி, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. அதேபோல, டெல்லி , மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற முக்கிய மாநிலங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இன்றும் தொடர்கின்றது. அதன்படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 105.41 காசுகளாகவும், கொல்கத்தாவில் ரூபாய் 115.12 காசுகளாகவும், விற்பனையாகிறது.

எதிர்க்கட்சிகள்
மும்பையில் ரூபாய் 120.51 காசுகளாகவும், சென்னையில் ரூபாய் 110.95 காசுகளாகவும் விலை இருந்து வருகிறது.... பெரும்பாலான இந்திய வடமாநிலங்களில் அந்தந்த விலையே இன்றும் தொடர்கிறது.. எனினும், வாகன ஓட்டிகள் இந்த விலையால் அதிருப்தியில் தான் உள்ளனர்.. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி, பல கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை செய்துவிட்டன.. ஆனாலும், ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், விலை குறையாமல் உள்ளது கடுமையான அதிர்ச்சியை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications