அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை!
சென்னை: போர் காரணமாக, இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
வழக்கமாக கலால் வரி குறைகிறது எனில், மொத்தமாக பெட்ரோல், டீசல் விலை சட்டென குறைந்துவிடும். ஆனால், இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை.

என்ன நடந்தது?
வளைகுடா போர், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவே நிலமையை சரி செய்ய மத்திய அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலிருந்து எரிபொருள் கொள்முதலை இரட்டிப்பு செய்திருக்கிறது. அதேபோல, ரஷ்ய கச்சா எண்ணெய்யை மீண்டும் சலுகை விலையில் பெற பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கிறது.
முக்கிய மீட்டிங்
இது தொடர்பாக நேற்று கேபினேட் மீட்டிங் நடைபெற்றது. அதில் உள்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட அமைச்சர்கள் உட்பட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு என்பது மத்திய அரசை அச்சமடைய செய்திருக்கிறது. நயாரா நிறுவனம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 என விலையை உயர்த்தியிருக்கிறது.
கலால் வரி குறைப்பு
எனவே மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்த ரெடியாகி வந்தன. இப்படி இருக்கையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.13 கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, டீசலுக்கு விதிக்கப்பட்டிருந்த கலால் வரி, ரூ.10 முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலால் வரியில் மாற்றம் செய்தால், அது உள்ளூர் லோக்கல் பெட்ரோல் பங்கில் எதிரொலிக்கும்.
ஏன் விலை குறையவில்லை?
ஆனால், இந்தமுறை விலை குறைவு எதிரொலிக்கவில்லை. காரணம் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்திருக்கிறது என்பதுதான். இந்த விலை உயர்வு, காலால் வரி குறைப்பை ஈடு செய்திருக்கிறது. எனவே, சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. ஈரான் போர் முடிவும் வரையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.
அதேபோல தற்போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், விலை ஏற்றம் பாஜகவுக்கு எதிராக அமைந்துவிடும். இதனால்தான், நிலைமையை சமாளிக்க கலால் வரி நீக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications