கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டையே சமாளிக்க முடியல! இதுல அடுத்த அதிர்ச்சியா? தூக்கத்தை தொலைத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் கையிருப்பு இந்த மாதம் வரை மட்டுமே இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக ஹோட்டல் சங்கம், தென்னிந்திய ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கம், தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்புகள், சிறு சிறு தொழில் சங்கங்கள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோல் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவைகளின் உயரதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

petrol diesel gas cylinder

இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அளித்த தகவலின்படி வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளது.

ஆனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் விறகு அடுப்புகளை பயன்படுத்தும் கட்டமைப்பு இப்போது இல்லை.

இதனால் மின்சார அடுப்புகளை பயன்படுத்த வசதியாக மின் கட்டணத்தில் மானியம் அல்லது குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர்களை பதுக்கினாலோ அல்லது ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை உயர்த்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அது போல் தமிழகத்தின் பெட்ரோல் கையிருப்பு இந்த மாதம் வரை மட்டுமே இருக்கிறது. பெட்ரோல் தட்டுப்பாடு இப்போது இல்லை என்றாலும் அச்சம் காரணமாகவே பலரும் பெட்ரோலை கேன்களில் வாங்கி கையிருப்பு வைத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் ஏற்கனவே பல நாடுகளுக்கு டேங்கர்கள் மூலம் எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் போக்குவரத்து வழியான ஹார்மூஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடிவிட்டது. இதனால் எண்ணெய் டேங்கர்கள் ஆங்காங்கே நடுக்கடலில் தத்தளித்து வருகின்றன.

கேஸ் சிலிண்டர் ரீஃபில் புக்கிங் எண் முடங்கியுள்ளதால் மக்கள் கேஸ் ஏஜென்சிகள் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அங்கு அவர்களுடன் வாக்குவாதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அது போல் இரவோடு இரவாக பெட்ரோல் நிரப்பவும் மக்கள் ஆர்வம் காட்டி பெட்ரோல் பங்க்குகளை குழுமியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் பெட்ரோல் டீசல்களுக்கு தட்டுப்பாடு என வதந்தி பரவிய நிலையில் நேற்று இரவு வேளச்சேரி பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களுடனும் கேன்களுடனும் பெட்ரோல், டீசல் வாங்க வந்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+