PHH, AAY ரேஷன் கார்டு நன்மை.. 10 ஆண்டுகளில் 4.20 லட்சம் ரேஷன் அட்டை ரத்து! அரசு வேலை, வாகனம் காரணம்
சென்னை: உணவு, வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது, ஆய்வுகள், தரவு திருத்த நடவடிக்கைகள் மூலம் போலி மற்றும் செயலற்ற ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில் டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. ரேஷன் கார்டுதாரர்களின் நன்மைக்காகவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
AAY (Antyodaya Anna Yojana) ரேஷன் கார்டு என்பது தமிழ்நாடு அரசால் மிகவும் ஏழ்மையான மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ரேஷன் கார்டு ஆகும். இந்த திட்டம் 2026ம் ஆண்டிலும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

மத்திய அரசு சபாஷ்
விதவைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், வருமானமில்லாதவர்கள் மற்றும் ஆதரவற்ற ஒற்றைப் பெண்கள் போன்றவர்கள் இந்த ரேஷன் கார்டுக்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தகுதியானவர்களா என்பதை உறுதி செய்வதற்காக e‑KYC செயல்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். அதேபோல் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம். இந்த நடவடிக்கைகளின் மூலம் போலி மற்றும் தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்கள்
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் வேலை அல்லது படிப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே ரேஷன் பொருட்களை பெறும் வசதி 2026‑இல் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. "எங்கும் ரேஷன்" வசதி மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எளிதாக ரேஷன் பெற முடிகிறது.
இன்னும் e‑KYC செய்யாதவர்கள் உடனடியாக அதை முடிக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. e‑KYC அல்லது ஆதார் இணைப்பு செய்யப்படாவிட்டால் ரேஷன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். அதேபோல் ரேஷன் கார்டு திருத்தங்களில் தவறான தகவல் வழங்கினால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
4.20 லட்சம் ரேசன் அட்டைகள் நீக்கம்
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், டெல்லி அரசு மொத்தம் 4.20 லட்சம் ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை தந்து கொண்டிருக்கின்றன..
நகரில் செயல்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை சீர்படுத்தவும், உண்மையில் தகுதி பெற்றவர்களே அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதை உறுதிசெய்யவும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது..
கடந்த 2015 ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரையிலான காலத்தில் தவறான பதிவுகள், தகுதி இல்லாத பயனாளர்கள், இரட்டை ரேஷன் கார்டுகள் போன்ற பிரச்சனைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.. குறிப்பாக, விதிமுறைகளை மீறி வாகனங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் அரசு/அரசு துறையில் பணியாற்றுபவர்கள் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
போலி ரேஷன் கார்டுகள் ரத்து
பொது விநியோகத் திட்டம் பொருளாதார ரீதியாக பலவீனமான மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதை தவறாக பயன்படுத்தும் நபர்களை கண்டறிந்து நீக்குவது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. சமீபத்தில் முடிவடைந்த டெல்லி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்த விவகாரம் குறித்து அரசு விரிவாக தகவல்கள் வெளியிட்டது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹரீஷ் குரானாவின் கேள்விக்கு டெல்லி அரசு விரிவான விளக்கம் ஒன்றை தந்துள்ளது.. அதில், "ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகள் பற்றிய புள்ளிவிவரங்களையும், காரணங்களையும் விளக்கியது... பயனாளர்களின் மரணம், வேறு மாநிலங்களுக்கு/பகுதிகளுக்கு இடமாற்றம், தகுதி இல்லாமை ஆகிய காரணங்களால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உணவு, வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது, ஆய்வுகள், தரவு திருத்த நடவடிக்கைகள் மூலம் போலி மற்றும் செயலற்ற ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மூலம் உணவு தானியங்கள் மற்றும் அரசின் மானியங்கள் வீணாகாமல், உண்மையான பயனாளர்களுக்கு சரியான முறையில் சென்றடைய முடியும் என்று நம்பப்படுகிறது,,
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
எனினும், ஒருசில தகுதியுள்ளவர்களின் ரேஷன் கார்டுகளும் தவறுதலாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவம் சலசலப்புகள் எழுந்துள்ளன,, அப்படி தகுதி உள்ளவர்களின் கார்டுகள் ரத்தாகியிருந்தால், அரசுக்கு உயிர முறையில் முறையீடு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். மீண்டும் ரேஷன் கார்டுகளை பெற்று கொள்ளலாம்" என்று டெல்லி அரசு உறுதி தந்துள்ளது..
கடந்த 10 ஆண்டுகளில் 4.20 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டாலும், டெல்லியில் பொது விநியோகத் திட்டம் வெளிப்படையாகவும் நியாயமாகவும் செயல்படுவதை அரசு உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நலத்திட்ட உதவிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications