PHH, AAY ரேசன் கார்டு இருக்கா? இந்த நாளை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! மறக்காம ரேசன் கடைக்கு போங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக இன்றைய தினம் (19.09.2026) குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. மேலும், இன்று அனைத்து நியாய விலை கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் அங்கு சென்றும் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்து விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணியை மேற்கொள்ளலாம்.

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக செப்டம்பர் - 2026 ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் இன்றைய தினம் (19.09.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

Ration Card eKYC Ration Shop

இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கலாம்.

கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு அளிக்கலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் மனு அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் மனு அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி குறைதீர் முகாமில் கலந்து கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம்.

எல்லாவற்றையும் விட அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் அனைவரது கைவிரல் ரேகையினையும் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே ரேஷன் அட்டை பயன்படுத்துபவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்ட இகேஒய்சி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பலர் அதனை செய்யாமல் இருக்கும் நிலையில் இன்று அனைத்து நியாய விலை கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் அங்கு சென்றும் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம். பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் கைவிரல் ரேகையை தாங்கள் வசித்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும்பொருட்டு இன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+