கூகுள் பே, போன் பே யூஸ் பண்ணுறீங்களா.. யுபிஐ-யில் சீக்கிரமே இந்த ஆப்ஷனை தூக்க போறாங்க! நோட் பண்ணுங்க
சென்னை: வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கூகுள் பே, போன் பே (Google Pay - PhonePe) உள்ளிட்ட யுபிஐ சேவை வழங்கும் செயலிகளில் மிக முக்கியமான ஆப்ஷன் ஒன்று நிறுத்தப்பட இருக்கிறது. மோசடிகளை தடுக்கும் விதமாக இந்த புதிய முறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) கொண்டு வர இருக்கிறது. இது குறித்த விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மக்களிடையே தற்போது யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்துள்ளது. சின்ன பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் அளவிற்கு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. கையில் ஒரு ரூபாய் இல்லாமல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கே சென்றுவிட்டு வரலாம் என சொல்லும் அளவிற்கு யுபிஐ பயன்பாடு மக்களிடையே சர்வசாதாரணமாக மாறிவிட்டது.

முக்கியமான வசதி நீக்கப்படுகிறது
சில வினாடிகளில் இந்த பரிவர்த்தனையை செய்ய முடியும் என்பதால் பெரும்பாலும் இப்போது டீக்கடைகளில் கூட யாரும் ரொக்கமாக பணம் கொடுப்பது இல்லை. எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது என்று சொல்வதற்கு உதாரணம் போல மாறிவிட்டது யுபிஐ. அதேவேளையில், மாறிவரும் தொழில் நுட்பத்திற்கு மோசடிகளும் புதுப்புது வழிகளில் அரங்கேறி வருகின்றன.
இதனால், யுபிஐ பயனர்கள் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய அப்டேட்கள் மற்றும் வசதிகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் யுபிஐயில் மிக முக்கியமான வசதி ஒன்று வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நீக்கப்பட உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல்
தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் புதிய விதிகளின் படி, வரும் அக்டோபர் மாதம் 1 தேதி முதல் யுபிஐயில் (P2P) என்ற பரிவர்த்தனைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி என்பது யுபிஐ பயனர்களுக்கு பணம் செலுத்துவதற்கான வேண்டுகோளாக இருந்தது. அதாவது, "collect request" என்ற ஆப்ஷன் இனி பயன்படுத்த முடியாது. இந்த வசதியானது பெரும்பாலும் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் மோசடி செயல்கள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கையை என்.பி.சி.ஐ எடுத்துள்ளது.
அதிகபட்சம் 2 ஆயிரம் வரை செலுத்தலாம்
இந்த கலெக்ட் ரெக்யூஸ்ட் வசதியை பெரும்பாலும் மோசடி கும்பலே பயன்படுத்துவதாகவும், பயனர்கள் இந்த பணம் செலுத்துதலுக்கான கோரிக்கையை ஏற்றவுடன் தங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் சென்றுவிடும். பணம் எடுப்பதற்கான கோரிக்கை என்று அறியாமலே பலரும் ஏமாந்துவிடுவதால் இந்த வசதி நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் வரை மட்டுமே செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
இது மோசடியை பெருமளவு கட்டுப்படுத்திய நிலையில், இத்தகைய மோசடிகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரும் வகையில், என்.பி.சி.ஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்மூலம் இனி பயனர்கள் யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டியிருந்தால் கியூ ஆர் கோடு அல்லது தொடர்பு எண்களை பயன்படுத்தி மட்டுமே அனுப்ப முடியும். வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
என்.பி.சி.ஐ கடிதம்
எனினும், இந்த புதிய மாற்றங்கள் வணிக பரிவர்த்தனைகளை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிளிப்கார்ட், அமேசன், ஸ்விக்கி, ஐஆர்சிடிசி போன்ற தளங்கள் வழக்கம் போல கலெக்ட் ரெக்யூஸ்ட் கொடுத்து பண பரிவர்த்தனைகளை பயனர்களிடம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவற்றை அப்ரூவ் செய்ய யுபிஐ பின் நம்பரை கட்டாயம் பதிவிட வேண்டியிருக்கும். எனவே, ஆன்லைன் பேமேண்டின் போது வழக்கம் போல பண பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக யுபிஐ சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கு என்.பி.சி.ஐ கடிதம் எழுதியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications