தான் படித்த டான்பாஸ்கோ பள்ளி.. வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிய உதயநிதி! வைரல் போட்டோ
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், டான்பாஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது தான் படித்த டான்பாஸ்கோ பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்
தமிழ்நாட்டில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்குச் சென்றனர்.
இந்நிலையில் ,டான்பாஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் ஆய்வு செய்த உதயநிதி தான் படித்த வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பள்ளிகள் திறப்பு
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 2ஆம் அலையும் முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. பள்ளிகளைப் பொறுத்தவரை முதற்கட்டமாக 9 முதல் +2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் இதர மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வழிகாட்டுதல்கள்
இதற்கான தேவையான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதேபோல பள்ளி, கல்லூரிகள் முழுமையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களில், பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும் மாணவர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன மேலும், நீண்ட காலத்திற்குப் பின் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவதால் எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல், உளவியல் ரீதியாக மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video

அமைச்சர் ஆய்வு
இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்குத் திரும்பினர். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அப்படி எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அவருடன் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதியும் உடன் இருந்தார்.

உதயநிதி வைரல் போட்டோ
அப்போது தான் படித்த டான்பாஸ்கோ பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் உதயநிகி கலந்துரையாடினார். இது குறித்து உதயநிதி தனது ட்விட்டரில், "பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். நான் அன்று பாடம் பயின்ற அதே வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. என் ஆசிரியர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
-
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications