தோள் மீது கை போட்ட மாற்றுத்திறனாளி மாணவன்.. உற்சாகமாக போஸ் கொடுத்த முதல்வர்.. நெகிழ்ந்த மக்கள்
Recommended Video

சென்னை: தனது தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்த மாற்றுத் திறனாளி மாணவருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உற்சாகமாக போஸ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக நிறுவன தின விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

இசை- ஓவிய கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவர் ஷ்ரேயாஸ்வி பாலா சான்றிதழ் பெற மேடைக்கு வந்தார்.
முதல்வர் அருகில் வந்த அவர் தோளில் கை போட்டு சிரித்தபடி, புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரது கையை எடுத்து விட முயன்றனர்.
உடனே முதல்வர், விடுங்கள் ஒன்றும் பிரச்சினையில்லை. அவர் விருப்பப்படி போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி உற்சாகப்படுத்தினார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் முதல்வரின் பெருந்தன்மை மிக்க குணத்தை பாராட்டினர்.












Click it and Unblock the Notifications