Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்!
சென்னை: 3 விதமான அறைகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் எந்த அறை உங்களுக்கு வேண்டும் என்பதை சொல்லுங்கள், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் சொல்கிறோம்.
ஆளுமைத் தேர்வுகள் என்பது நம் அடையாளத்தின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்வதற்கு ஒரு சுவாரஸ்யமான வழியாகும். எளிய காட்சி விருப்பங்களில் இருந்து, ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் வரை, அவை நம் உள்ளுணர்வுகள், உணர்வுகள் மற்றும் விருப்பங்களைத் தூண்டுகின்றன. இந்தத் தேர்வுகள், நாம் அறியாத நம் ஆளுமையின் அம்சங்களையும், புதைந்திருக்கும் திறன்களையும் கண்டறிய உதவக்கூடும்.

நம்ம எல்லோருக்குள்ளும் ஒரு 'ஆல்டர் ஈகோ' ஒளிஞ்சுருக்கும். சில நேரங்களில் ஒரு போட்டோவோ இல்ல ஒரு ரூம் டிசைனோ பார்த்தாலே, "ஆகா.. இது எனக்காகவே செஞ்சதுப்பா!"ன்னு தோணும் பாருங்க, அங்கதான் நம்ம உண்மையான முகம் வெளியே வரும். இது ஒன்னும் பெரிய சயின்ஸ் ஆராய்ச்சி எல்லாம் இல்லைங்க; சும்மா ஒரு ஜாலி விளையாட்டுதான்!
உங்கள் கனவு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த எளிய ஆளுமைத் தேர்வு மூலம் கண்டறியலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று அறைகளில், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கனவு வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. உங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான அறையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆழ்மன விருப்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
3 விதமான அறைகள் இருக்கு. இதில் உங்களுக்குப் பிடிச்ச ரூமை செலக்ட் பண்ணுங்க... உங்க மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கற அந்த ரகசிய ஆசையை நாம கண்டுபிடிச்சிடலாம்!
போஹோ (Boho) ரூம்: "அமைதியோ அமைதி" ரகம்
ரூம் எப்படி இருக்கும்: மென்மையான பிரவுன் கலர், இயற்கையான வெளிச்சம், சிம்பிளான ஆனா செம க்யூட்டான டிசைன்.
நீங்க எப்படிப்பட்டவர்: இந்த ரூமை நீங்க தேர்ந்தெடுத்தா, நீங்க ஒரு 'பீஸ் லவ்வர்'. "பரபரப்பா ஓடி என்னத்த சாதிக்கப்போறோம்?"னு நினைக்கிற ரகம். காலையில ஒரு கப் காபியோட, நிதானமா பாட்டு கேட்டுக்கிட்டு, டைரி எழுதிக்கிட்டு, மனசுக்கு நிம்மதி தர்ற விஷயங்களை மட்டும் செய்யணும்னு ஆசைப்படுவீங்க. உங்களுக்குப் பணத்தை விட 'மன நிம்மதி' தான் முக்கியம். சுருக்கமா சொல்லணும்னா, நீங்க ஒரு 'மாடர்ன் முனிவர்'!
வைப்ரண்ட் (Vibrant) ரூம்: "எனர்ஜி டானிக்" ரகம்
ரூம் எப்படி இருக்கும்: கண்ணைப் பறிக்கிற சிவப்பு நிறம், செம பவர்ஃபுல் வைப், பார்த்தாலே துள்ளிக் குதிக்கணும்னு தோண்ற அளவுக்கு ஹையான எனர்ஜி!
நீங்க எப்படிப்பட்டவர்: உங்களுக்கு 'வெற்றி'ன்னா சும்மா காசு சேர்க்கிறது மட்டும் கிடையாது; நாலு பேருக்கு முன்னாடி கெத்தா, ஸ்டைலா வாழ்ந்து காட்டணும்னு நினைப்பீங்க. நீங்க ஒரு 'ஆக்ஷன் ஹீரோ'. சவால்கள்னா உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. ஒரு குரூப்புக்கு நீங்கதான் லீடரா இருப்பீங்க. சுறுசுறுப்பா இருக்கிறது, புதுசு புதுசா எதையாவது சாதிக்கிறதுன்னு நீங்க எப்போவும் ஒரு 'ஹை வோல்டேஜ்' மோட்லயே இருப்பீங்க!
நியான் (Neon) ரூம்: "ஃபியூச்சரிஸ்டிக்" ரகம்
ரூம் எப்படி இருக்கும்: ஃபுல்லா நியான் லைட்ஸ், ஒரு மாதிரி சயின்ஸ்-ஃபிக்ஷன் படம் பார்க்கிற ஃபீல், எதிர்காலத்துக்கே போன மாதிரி ஒரு லுக்!
நீங்க எப்படிப்பட்டவர்: நீங்க ஒரு 'கிரியேட்டிவ் ஜீனியஸ்'. மத்தவங்க போற பாதையில போக உங்களுக்குப் பிடிக்காது. "ரூல்ஸ் எல்லாம் எதுக்கு? உடைக்கிறதுக்குதான்!"னு நினைக்கிற ரிஸ்க் எடுக்குற ரகம். ராத்திரி நேரத்துலதான் உங்க மூளை ஜெட் வேகத்துல வேலை செய்யும். புது புது ஐடியாக்கள், டெக்னாலஜி, ஆர்ட்னு எப்போவும் வித்தியாசமா யோசிப்பீங்க. நீங்க வாழப்போற வாழ்க்கையும் மத்தவங்க கற்பனை செஞ்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு கலர்ஃபுல்லா இருக்கும்!
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications