வெறும் 24 வயசுதான்.. ஆனால் தேவி செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!
ரயில்களில் பயணிகளிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: 24 வயது தேவி, புறநகர் ரயில்களில் செய்து வந்த காரியம் ஒவ்வொன்னும் போலீசாரை அதிர வைத்துள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, பூங்கா ரயில் நிலையங்களில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் திருடு போவதாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது யார் என கண்டறிய முற்பட்டனர். அப்போது சிக்கியவர்தான் தேவி.

செங்கல்பட்டு நோக்கி செல்லும் எலக்ட்ரிக் ரயில் ஒன்று பூங்கா ஸ்டேஷன் வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த தேவி மீது போலீசாருக்கு சந்தேகம் வரவும், அழைத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் தேவி முன்னுக்குப் பின் முரணாக பேசவும், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். சொந்த ஊர், ஜோலார்பேட்டை என்பதும், கணவர் பெயர் ஏழுமலை என்பதும் தெரியவந்தது.
கூட்டமாக இருக்கும் புறநகர் ரயில்களில் ஏறி கொண்டு, பயணிகள் பக்கத்தில் நெருக்கமாக இருந்து நகை பணம், பர்ஸ்களை கொஞ்ச நேரத்தில் அடித்து விடுவாராம். திருடுவதுதான் முழு நேர பொழப்பாம்.. அவரிடம் சோதனை செய்தபோது, பயணிகளிடம் இருந்து அப்போது ஆட்டைய போட்டிருந்த 8 பவுன் நகைகள் மற்றும் 46 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தேவியையும் கைது செய்து புழலில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications