விபரீத ஆசை.. சென்னையில் பிரபல ஐடி கம்பெனியில்.. குவிந்து கிடந்த ஐடி பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள்!
சென்னை: சென்னையில் பிரபல ஐடி கம்பெனியில் வேலை செய்யும் என்ஜீனியர் இளைஞர் ஒருவர் பெண்களை போல் போலியாக புரொபைல் கிரியேட் செய்து ஆபாச சாட்டிங் செய்து வந்தார். அவரது செல்போனில் குவிந்து கிடந்த ஐ.டி.பெண் ஊழியர்களின் ஆபாச படங்களை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை போரூரில் இயங்கி வரும் பிரபல ஐ.டி.நிறுவனத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரது பெயரில் போலியாக பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டிருந்தது. அவர் அனுப்புவது போன்று ஏராளமான ஆபாசமான குறுஞ்செய்திகள் இளைஞர்களுக்கு அடிக்கடி அனுப்பப்பட்டு இருந்தது.

மேலும் அந்த பெண்ணின் தோழியின் பிறந்த நாள் அன்று அலுவலகத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் ஆபாசமாக மாற்றி பதிவிட்டு இருந்தார்கள். இதனை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த அந்த இளம் பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தனது பெயரில் தன் அலுவலகத்தில் இருக்கும் படங்களை எல்லாம் யார் ஆபாசமாக எடுத்து பதிவிட்டார்கள் என்று தெரியாமல் தவித்தார்.
உடனடியாக அந்தஇளம் பெண் சென்னை தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். தென் சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படியே தெற்கு மண்டல சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் இளம்பெண் பணி புரியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் என்ஜினீயர் தமிழ்மாறன் என்பவர் இளம்பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக பதிவிட்டு பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்மாறனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட ஐ.டி.பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள் குவியல் குவியலாக இருந்தது.
தமிழ்மாறன் இளம்பெண் சாட்டிங் செய்வது போல் இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு இரவு முழுவதும் செக்ஸ் சாட்டிங் செய்ய விபரீதமாக ஆசைப்பட்டார். இதற்காக தமிழ்மாறன் ஏராளமான பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி சாட்டிங் செய்து வந்ததுள்ளார்.
ஒரு கட்டத்தில் தமிழ்மாறன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களையும் படம் பிடித்துள்ளார். அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து இருந்தார். அதனை வைத்தும் போலி கணக்கு தொடங்கி சாட்டிங் செய்துள்ளார். விபரீத ஆசையால் தமிழ்மாறன் சிக்கிய நிலையில் , அந்த படங்கள் அத்தனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ஆபாச சாட்டிங் செய்து யாரிடமாவது பணம் பறித்து உள்ளாரா? உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா அல்லது என்னென்ன செய்தார் என்று சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications